180 ரன்ஸ்.. சிக்ஸருடன் ஃபினிஷ்.. லெஜெண்ட்ஸ் போட்டியில் யுவி அணியை சச்சின் அணி சாய்த்தது எப்படி?

OWOF Cup Sachin
- Advertisement -

கர்நாடகாவில் ஜனவரி 18ஆம் தேதி ஒரு உலகம் ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடிய சிறப்பு கண்காட்சி டி20 போட்டி நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இப்போட்டி நடைபெற்றது.

அதில் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரது தலைமையில் நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் முதன்னஹள்ளியில் இருக்கும் சாய் கிருஷ்ணா கிரிக்கெட் மைதானத்தில் காலை 11 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

சச்சின் அணி வெற்றி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஒரு குடும்பம் அணிக்கு இலங்கை வீரர் கழுவிர்த்தனா அதிரடியாக 22 (15) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த இந்திய வீரர் முகமது கைப் 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 (41) ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த போது சச்சின் டெண்டுல்கர் சுழலில் அவுட்டானார்.

இறுதியில் யூசுப் தான் அதிரடியாக 38 (24) ரன்களும் கேப்டன் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (10) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் ஒரு குடும்பம் அணி 180/6 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு உலகம் சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஆர்பி சிங் அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஒரு உலகம் அணிக்கு நமன் ஓஜா 25 (18) ரன்களில் வாஸ் வேகத்தில் அவுட்டாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக 27 (16) ரன்கள் எடுத்த போது முத்தையா முரளிதரன் சுழலில் அவுட்டானார். இருப்பினும் 3வது இடத்தில் வந்து அதிரடி காட்டிய அல்வீரோ பீட்டர்சன் வேகமாக ரன்களை சேர்த்த நிலையில் எதிர்புறம் உப்புள் தரங்கா 29, சுப்பிரமணியம் பத்ரிநாத் 4, ஹர்பஜன் 4 ரன்களில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: நாட்டுக்காக போராடும் போது வெறித்தனமா சண்டை போடுவதில் தப்பில்ல.. ரோஹித்துக்கு டிராவிட் ஆதரவு

மறுபுறம் தொடர்ந்து அசத்திய அல்விரோ பீட்டர்சனும் 74 (50) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய சகோதரர் யூசுப் பதான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த இர்பான் பத்தான் 12* (5) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் சச்சின் தலைமையிலான அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் யுவராஜ் தலைமையிலான அணிக்கு அதிகபட்சமாக சமீந்தா வாஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை

Advertisement