வாட் எ பிரிலியன்ட் கேம். மீண்டும் ஒரு மனதை வென்ற போட்டி – மனதார புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

sachin
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது சூப்பர் 12-சுற்றுகளை கடந்து தற்போது அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் தற்போது இரண்டாவது முக்கியமான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. நியூசிலாந்து அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வர நியூசிலாந்து அணியின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டி இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : இந்த போட்டி ஒரு அற்புதமான ஆட்டமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நம் இதயங்களையும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளனர். மிட்சல் மிகவும் அற்புதமாக விளையாடினார். அவருக்கு கான்வே மற்றும் நீஷம் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தனர். இந்த ஆட்டத்தில் சில தருணங்கள் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவு படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த போட்டியில் ஒரு பிரமாண்டமான வெற்றி என்றும் நியூசிலாந்து அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் சச்சின் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி டி20 வேர்லடுகப் ஜெயிக்கணுனா அடுத்த வருஷத்துக்குள்ள இதை செய்தே ஆகனும் – லக்ஷ்மணன் ஓபன்டாக்

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஏற்கனவே 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிர்ஷ்டவசமின்றி இறுதிநேரத்தில் தோற்ற நிலையில் இம்முறை டி20 உலகக் கோப்பையை வெற்றிபெற கடுமையாக போராட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement