இந்திய அணி டி20 வேர்லடுகப் ஜெயிக்கணுனா அடுத்த வருஷத்துக்குள்ள இதை செய்தே ஆகனும் – லக்ஷ்மணன் ஓபன்டாக்

Laxman
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது சூப்பர் 12-சுற்றின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததன் காரணமாக தற்போது சூப்பர் 12-சுற்றோடு இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் சில தினங்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

indvsnz

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியானது அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடரில் வெற்றிபெற வேண்டுமெனில் அணியில் சில முக்கிய மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் சில முக்கிய மாற்றங்களை செய்தாக வேண்டும்.

இந்திய அணியின் டி20 ஆட்டத்தின் அணுகுமுறையில் நாம் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். 50 ஓவர் போட்டிகளில் போல டி20 போட்டிகளில் விளையாட முடியாது. டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் முழுமனதுடன் ஊக்கம் கொடுத்து அரவணைத்து செல்ல வேண்டிய பணியை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் செய்தாக வேண்டும்.

Ind

மறுபக்கம் இந்திய அணியில் இரண்டு இடங்களில் வெற்றிடம் இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் சரியான வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அணியில் நிச்சயம் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அவசியம். பாண்டியாவிற்கு மாற்று வீரராக அதனை கருதாமல் அணியின் தேவையை கருத்தில் கொண்டு அப்படி ஒரு வீரரை தேர்வு செய்தாக வேண்டும். மேலும் கேப்டன் தனது ஆடும் லெவனில் எந்தவித அழுத்தமும் இன்றி அணியை தேர்வு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ப்ளீஸ் என்னை டீம்ல செலக்ட் பண்ணாதீங்க. நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த ரோஹித் சர்மா – பரபரப்பு தகவல்

இந்திய அணியின் முக்கியமான இரண்டு வீரர்களை நாம் தற்போது இருந்தே தயார் செய்து பலப்படுத்தி வைத்தால் மட்டுமே அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அது கூடுதல் பலத்தை சேர்க்கும் என லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தற்போது டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement