ப்ளீஸ் என்னை டீம்ல செலக்ட் பண்ணாதீங்க. நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த ரோஹித் சர்மா – பரபரப்பு தகவல்

Rohit Press
- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு அடுத்ததாக இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு விராட் கோலி தனது கேப்டன் பதவியை துறந்தார். இதன்காரணமாக இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி ஓய்வு எடுத்துள்ளார்.

indvsnz

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியின் அனுபவ வீரரான ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிராவிட் பயிற்சியாளராகவும், ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட இருக்கின்றனர். இதன்காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களான கோலி, பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுல் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என தேர்வு குழுவினரை ரோகித் சர்மா கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Rohith

அதன்படி பயோ பபுளில் தொடர்ந்து விளையாடி வருவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த டெஸ்ட் தொடரில் தனக்கு ஓய்வு தேவை என்று ரோகித் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தன்னை டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக நிச்சயம் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது .

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கர் பண்ண அதே விஷயத்தை விராட் கோலி இனிமேல் பண்ணனும் – சேவாக் ஓபன்டாக்

வர் விளையாட முடியாத பட்சத்தில் கேப்டனாக ரஹானே செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் விராத் கோலியும், கே.எல் ராகுலும் இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வு வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். எனவே ரோஹித், கோலி, ராகுல் என யாரும் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெறாத பட்சத்தில் அணியின் கேப்டனாக ரஹானே வழிநடத்துவார் என்று தெரிகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கான அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement