இந்த விளம்பரத்துல மட்டும் நான் நடிக்கவே மாட்டேன். 24 ஆண்டுகளுக்கு முன்பே மறுத்த சச்சின் – சுவாரசிய தகவல்

Sachin-Tendulkar
- Advertisement -

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த பேட்ஸ்மேனாக எப்பொழுதுமே பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு “மாஸ்டர் பிளாஸ்டர்” என்ற ஒரு செல்ல பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு. தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் கரியரில் சச்சின் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அவ்வளவு சாதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அதிக சதங்கள், அதிக ரன்கள் என ஏகப்பட்ட சாதனையை தன்வசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக 1998-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

Sachin Tendulkar 1

- Advertisement -

ஏனெனில் 1998-ஆம் ஆண்டு ஷார்ஜா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் சச்சின் 131 பந்துகளில் 143 ரன்கள் அடித்து அணியின் அணியின் பந்துவீச்சை பிரித்து எடுத்து இருப்பார். சச்சின் டெண்டுல்கரின் அந்த இன்னிங்ஸ் “டெசர்ட் ஸ்ட்ரோம் ஆப் சார்ஜா” என்ற அடைமொழியுடன் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு இன்னிங்ஸ்ஸாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த போட்டிக்கு அடுத்ததாக சச்சின் டெண்டுல்கருக்கு வந்த ஒரு விளம்பர வாய்ப்பை அவர் மறுத்துள்ளதாக தற்போது 24 ஆண்டுகள் கழித்து அது குறித்த சுவாரசிய தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 1998-ஆம் ஆண்டு அந்த சார்ஜா போட்டிக்கு பிறகு நாங்கள் நாடு திரும்பினோம். அப்போது எங்களது ஸ்பான்ஸர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு விளம்பரத்தில் நடிக்க என்னை அணுகினார்.

Shoaib Akhtar Sachin Tendular

அதன்படி அந்த விளம்பர இயக்குனர் கூறுகையில் : நீங்கள் கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும்போது பந்து ரூபத்தில் பல அரக்க உருவங்கள் வரும் அந்த உருவங்களை நீங்கள் மைதானத்திற்கு வெளியே பேட்டால் அடித்து விரட்டும்படி இந்த விளம்பரம் அமையும் என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். ஆனால் நான் அப்போது அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அந்த ஸ்கிரிப்ட்டை மாற்றுமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

- Advertisement -

ஏனெனில் என்னுடைய விளையாட்டை அவமதிக்கும் வகையில் அந்த விளம்பரம் இருந்தது. உண்மையில் ஒரு வீரருக்கு அவரது விளையாட்டின் மீது முழுமையான மதிப்பு இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டை அவமதிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சச்சின் டெண்டுல்கர் தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி 3 ஃபார்மட்லயும் அவர் தான் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் – இளம் வீரரை பாராட்டும் வாசிம் ஜாபர்

ஒருவேளை நான் அந்த விளம்பரத்தில் நடித்துவிட்டு எனது வீட்டிற்கோ அல்லது எனது பயிற்சியாளர்களிடமோ என்னால் சென்றிருக்க முடியாது. சிறு வயதில் இருந்தே எனக்கு அனைவரும் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அதற்கான மதிப்பும் எனக்கு தெரியும். எனவே நாம் ஒழுக்கமான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement