நெறைய ஷாட்ஸ் விளையாடினீங்க. ஆனா இந்த ஒரு ஷாட்டை நம்பவே முடியல – சச்சினையே வியக்க வைத்த சூரியகுமார் யாதவ்

Sachin-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விதமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிரடியாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 216 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து ரோஹித், ரிஷப் பண்ட், கோலி என விக்கெட்டுகளை இழக்க எளிதில் இங்கிலாந்து அணியிடம் சரணடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மிடில் ஆர்டரில் சூர்யா குமார் யாதவ் விளையாடிய விதம் இங்கிலாந்து அணிக்கு பயத்தை அளித்திருக்கும் என்று கூறலாம். ஏனெனில் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் இருக்கும் வரை இங்கிலாந்து வீரர்கள் சற்று யோசிப்பதறியாமல் திகைத்து நின்றனர் என்று கூறலாம். அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 117 ரன்கள் குவித்து 19வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அவர் ஆட்டம் இழக்கும் வரை பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த போட்டியில் சூர்யா குமார் யாதவ் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. இறுதியில் இந்திய அணியால் 20 ஓவர்களில் 198 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்த வேளையில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். அதேபோன்று நான்காவது இடத்தில் இறங்கி இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். இறுதியில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சூரியகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூரியகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரிய குமார் யாதவை வாழ்த்தி சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : இந்த போட்டியில் நீங்கள் பல அற்புதமான ஷாட்டுகளை விளையாடினீர்கள். அதிலும் சில பிரில்லியண்டான ஷாட்களையும் நீங்கள் விளையாடியிருந்தீர்கள்.

இதையும் படிங்க : அவரோட ஷாட்ஸ்லாம் ஒன்னொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. சூரியகுமாரை பார்த்து திகைத்துப்போன – இங்கிலாந்து பவுலர்

ஆனால் பாயிண்ட் திசையில் ஸ்கூப் செய்து அடித்த சிக்சர் கண் கவரும்படி இருந்தது என அந்த புகைப்படத்தை பகிர்ந்து சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement