அவரோட ஷாட்ஸ்லாம் ஒன்னொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. சூரியகுமாரை பார்த்து திகைத்துப்போன – இங்கிலாந்து பவுலர்

Reece-Topley
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நாட்டிங்காம் நகரில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது t20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மலான் 77 ரன்களையும், லிவிங்ஸ்டன் 42 ரன்களையும் குவித்தனர்.

Livingstone

- Advertisement -

அதனை தொடர்ந்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சூரியகுமார் யாதவியின் அதிரடி ஆட்டம் காரணமாக இறுதிவரை சென்று 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அவரது இந்த தனிப்பட்ட போராட்டம் தற்பொழுது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லீ சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். பின்னர் போட்டி முடிந்து இந்த ஆட்டம் குறித்து பேசியிருந்த ரீஸ் டாப்லீ கூறுகையில் :

Suryakumar Yadav 1

இன்றைய போட்டியில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நான் பந்து வீசும் மிகச் சிறப்பாக இருந்தது. வெவ்வேறு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் அற்புதமாக பந்துவீசினேன். சில பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ஆடினார்கள். சில பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை சந்தித்தார்கள்.

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது சூரியகுமார் யாதவ் வந்து விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. இந்திய அணிக்காக அவர் விளையாடிய இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரது ஒவ்வொரு ஷாட்டுக்களும் ஒவ்வொரு வகையில் இருந்தது. அவரின் ஆட்டத்தை பார்த்து ஒரு கட்டத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. அந்த அளவிற்கு நம்ப முடியாத சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இருப்பினும் இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : என்னமா ஆடுறாருங்க. நம்பமுடியாத ஒரு இன்னிங்ஸ். வெற்றிக்கு பிறகு இந்திய வீரரை – வாழ்த்திய ஜாஸ் பட்லர்

இந்த வெற்றியை அப்படியே தொடர விரும்புகிறோம் என ரீஸ் டாப்லீ கூறினார். என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்து ஒவ்வொருவரும் தற்போது தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் அவரது இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement