என்னமா ஆடுறாருங்க. நம்பமுடியாத ஒரு இன்னிங்ஸ். வெற்றிக்கு பிறகு இந்திய வீரரை – வாழ்த்திய ஜாஸ் பட்லர்

Buttler
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளிலும் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று ஒரு ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த இங்கிலாந்து அணியானது டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சிறப்பான இன்னிங்சை விளையாடிய அவர்கள் அவ்வப்போது நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தும், பெரிய ரன்களை குவித்தும் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் என்ற ஒரு பெரிய ரன் குவிப்பை வழங்கினர்.

பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது துவக்கத்தில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய சூரியகுமார் யாதவ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 55 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி, 6 சிக்சர் என 117 ரன்களை குவித்து அசத்தினார். அவருக்கு ஒருபுறம் கை கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 28 ரன்கள் அடித்தாலும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

Suryakumar yadhav

அதன் பின்னர் வந்த வீரர்களும் சூரியகுமார் யாதவுக்கு கை கொடுக்காததால் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் சூரியகுமார் யாதவின் ஆட்டம் பலராலும் புகழப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடியது மிகவும் நல்ல ஒரு என்டர்டைன்மென்ட்டாக இருந்தது. இது இரு அணிகளுக்குமே ஒரு அருமையான போட்டியாக அமைந்தது. முதல் இன்னிங்சை நாங்கள் விளையாடி முடித்ததும் நிச்சயம் இந்த ரன் வெற்றிக்கு போதுமான அளவையும் சற்று தாண்டி இருந்ததாக நினைத்தேன். ஆனால் இந்திய அணி இந்த இலக்கினை துரத்தும் போது அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்தாலும் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்து எங்களை சிறிது பயமுறுத்தி விட்டார் என்று கூற வேண்டும். அவரது இந்த இன்னிங்ஸ் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை எங்களுக்கு சற்று பதட்டமாகவே இருந்தது.

இதையும் படிங்க : IND vs ENG : இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும் – தோல்விக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

இருப்பினும் இறுதியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்றுத்தந்தனர். இந்த போட்டியில் ரீஸ் டாப்லீ வேகத்தை குறைத்து அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று க்லீசன் மீண்டும் ஒருமுறை எங்களுக்காக அருமையாக பந்து வீசியுள்ளார். கிறிஸ் ஜோர்டான் வழக்கம் போலவே இது போன்ற கடினமான வேளைகளில் சிறப்பாக பந்து வீசுவார். ஒட்டுமொத்தமாக எங்கள் அணியின் பந்துவீச்சு இன்று சரியாக இருந்ததாலே இந்த வெற்றி கிடைத்தது என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement