IND vs ENG : இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும் – தோல்விக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது t20 போட்டி நேற்று நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 77 ரன்களும், லிவிங்ஸ்டன் 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

- Advertisement -

பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யா குமார் யாதவ் மட்டும் தனி ஒருவராய் நின்று 55 பந்துகளில் 117 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். அவரை தவிர ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 28 ரன்களை குவித்தார்.

அவரை தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காததால் இந்திய அணி இறுதி வரை சென்று தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நான் இந்த போட்டி ஒரு சிறப்பான சேஸிங் ஆட்டமாக இருக்கும் என்று நினைத்தேன். இறுதியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று நாங்கள் தோல்வி அடைந்தது சற்று வருத்தம் தான்.

Suryakumar Yadav

இருந்தாலும் இவ்வளவு பெரிய இலக்கினை துரத்தி இப்படி ஒரு போட்டியை கொடுத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சூரியகுமார் யாதவ் விளையாடுவதை பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது. நான் கடந்த சில ஆண்டுகளாகவே அவரை கவனித்து வருகிறேன். அவர் இந்த வடிவிலான கிரிக்கெட்டை மிகவும் என்ஜாய் செய்து விளையாடுகிறார்.

- Advertisement -

அதோடு அவர் இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து இதுவரை நாளுக்கு நாள் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார். அவரிடம் நிறைய கிரிக்கெட் ஷாட்களும் உள்ளன என்று ரோகித் தெரிவித்தார். மேலும் இங்கிலாந்து அணி குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பாதகம் – இந்திய ஜாம்பவான் கவலை

இங்கிலாந்து அணி வீரர்களின் பெரிய பார்ட்னர்ஷிப் எங்களை பெரிய அழுத்தத்திற்கு தள்ளியது. அவர்கள் தொடர்ச்சியாக அளித்த பாட்னர்ஷிப்பை எங்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை இது போன்ற பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும்போது இன்னும் துணிவுடன் ஆட வேண்டும் என்று ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement