இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. இப்போ புரியுதா ? ஆஸ்திரேலிய அணியை வாழ்த்திய – சச்சின் டெண்டுல்கர்

sachin
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறியது. இதனால் இந்திய அணி வரலாறு காணாத நிலையில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான ரன் குவிப்பு மட்டுமின்றி மோசமான நாளாகவும் இது அமைந்தது.

Ind

- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை அசத்தலாக வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டியிலும் அதே ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் போது மொத்தமாக தலைகீழாக மாறியது.

பெரிய எதிர்பார்ப்போடு நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே அடித்தாலும் இரண்டாவது இன்னிங்சில் போது சிறப்பாக விளையாடி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களில் எட்டவில்லை அனைத்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 90 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

paine

இந்திய அணியின் இந்த படுதோல்வி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மட்டுமின்றி விமர்சனத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்தாவது : முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செயல்பட்ட விதம் அவர்களை டிரைவர் சீட்டில் இருப்பது போல அதாவது முன்னிலையில் இருப்பதாக இருந்தது.

ஆனால் அடுத்த இரண்டாவது இன்னிங்சில் போது ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி நீண்டுவிட்டது. இதுதான் டெஸ்ட் போட்டியின் அழகு. போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தன்னுடைய கிளாஸ் என ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement