- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதிரணிக்கு பலவீனத்தை காட்டாத சுப்மன் கில் கேப்டனாக அசத்துவாரு.. இந்தியாவின் கம்பேக் பற்றி சச்சின் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடுகிறது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியதால் இங்கிலாந்து வெல்லும் என்று பலரும் கணித்தனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா பரிதாப உலக சாதனையை படைத்தது.

இருப்பினும் அதற்கெல்லாம் அசராத இந்தியா இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை புரட்டி எடுத்து 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்ற ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்தது. அந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன் கில் 430 ரன்கள் குவித்து பல சாதனைகளை புரிந்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று தம்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் தக்க பதிலடி கொடுத்தார். இந்நிலையில் சுப்மன் கில் மிகவும் பொறுமையுடன் அமைதியாக கேப்டனாக செயல்படுவதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். பொதுவாக ஒரு கேப்டன் சிறப்பாக செயல்படுவதற்கு பேட்ஸ்மேனாக நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

பேட்டிங்கில் எந்த பலவீனத்தையும் காட்டாமல் அதைப் பெற்றுள்ள காரணத்தால் சுப்மன் கில் தொடர்ந்து அசத்துவார் என்று தெரிவிக்கும் சச்சின் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கில் நன்றாக செயல்படுகிறார். மிகவும் பொறுமையாக அமைதியாக இருக்கும் அவர் எடுத்த எந்த முடிவுகளுக்கு மீதமுள்ள 10 வீரர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது நன்கு சிந்திக்கப்பட்ட முடிவாக இருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்”

- Advertisement -

சச்சின் பாராட்டு:

“அதை அவருடைய பேட்டிங் பூர்த்தி செய்கிறது. ஒரு கேப்டன் நல்ல ஃபார்மில் இருக்கும் போது முடிவுகளை எடுப்பதில் மிகப்பெரிய வித்தியாசங்கள் தெரியும். அந்த முக்கிய முடிவுகளை எடுக்க நீங்கள் சரியான மனநிலையில் இருக்க வேண்டும். அதை செய்யும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எதிரணிகள் உங்களுடைய பேட்டிங்கில் இருக்கும் பலவீனங்களைக் கண்டறிய முயற்சி செய்வார்கள்”

இதையும் படிங்க: இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் 2 வாழ்நாள் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்.. புதிய உலக சாதனை

“அப்படிப்பட்ட நிலையில் தற்சமயத்தில் உங்களுடைய டெக்னிக் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இதுவரை அவரை நான் பார்த்ததில் அது ஸ்பெஷலாக தெரிகிறது. முதல் போட்டியில் ஏமாற்றத்தை சந்தித்த பின்பும் நாம் கம்பேக் கொடுத்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் கில் தலைமையில் இந்தியா விளையாடி வருகிறது.

- Advertisement -