வீடியோ : இவர்கிட்ட அருமையான திறமை இருக்கு, 2020லயே கணித்த சச்சின் – உதவியால் சாதித்ததை பற்றி ப்ரப்சிம்ரன் சிங் பேட்டி

- Advertisement -

கோலகலகமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 59வது லீக் போட்டியில் டெல்லியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்க்கு கேப்டன் ஷிகர் தவான் 7, லியம் லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 45/3 என திணறிய பஞ்சாப்புக்கு மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்குடன் அடுத்து வந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த சாம் கரண் கடைசி வரை மெதுவாகவே விளையாடிய 20 (24) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் முதல் 10 ஓவரில் 31 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்து 10 பவுண்டரி 6 சிக்சருடன் 103 (65) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அன்றே கணித்த சச்சின்:
அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் அதிரடியாக 10 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (27) ரன்கள் எடுத்தார். ஆனால் பில் சால்ட் 21 (17) ரிலீ ரோசவ் 5, அக்சர் படேல், மனிஷ் பாண்டே 0 என முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து 20 ஓவர்களில் டெல்லியை 136/8 ரன்கள் கட்டுப்படுத்தி வென்ற பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 4 விக்கெட்டுகளை செய்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி தடுமாறிய பஞ்சாப்பை பேட்டிங்கில் தனி ஒருவனாக சதமடித்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பஞ்சாப்பை சேர்ந்த அவர் கடந்த 2018 முதல் பஞ்சாப் அணியில் வாங்கபட்டும் நிலையற்ற வாய்ப்புகளுடன் பெஞ்சில் அமர்ந்திருந்தார். இருப்பினும் 2020 சீசனில் அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்ததாக தனது ட்விட்டரில் பிரத்யேக வீடியோ பதிவில் சச்சின் பாராட்டி பேசியது பின்வருமாறு. “பிரப்சிம்ரன் இந்த சீசனில் நாம் பார்க்க வேண்டிய ஒரு வீரர். அவருடைய பேக் லிஃப்ட் மற்றும் பேட்டை சுழற்றும் விதம் ஆகியன தடுமாற்றமின்றி சுதந்திரமாக இருக்கிறது. குறிப்பாக பந்து அவருடைய பேட்டில் படும் போது வரும் சத்தம் மிகவும் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த வருடம் மும்பைக்கு எதிரான போட்டியின் முடிவில் சச்சினை பார்த்து தமக்கு வாய்ப்பே கிடைக்காமல் இருப்பதால் எப்படி திறமையை வெளிப்படுத்த முடியும் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக பிரப்சிம்ரன் சிங் தற்போது கூறியுள்ளார். அதற்கு சச்சின் கூறிய வார்த்தைகள் தமக்கு உதவியதை பற்றி அவர் நேற்றைய போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “அணியின் கலவையால் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் இருந்தது மிகவும் கடுப்பேற்றியது. ஏனெனில் நான் களமிறங்கி விளையாடுவதற்கு விரும்பினேன்”

“கடந்த வருடம் மும்பைக்கு எதிரான போட்டியின் முடிவில் நேராக சச்சினை சந்தித்த நான் “சார் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது விரக்தியை கொடுக்கிறது” என்று கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு எனது தோள் மீது கை போட்ட அவர் “நீ கடினமாக உழைத்த காரணத்தாலேயே முதலில் இந்த இடத்தில் இருக்கிறாய். இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடியும் எந்த அணிகளும் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை பற்றி யோசித்துப் பார்”

இதையும் படிங்க:ஜிம்பாப்வே ஜாம்பவான் ஹெத் ஸ்ட்ரீக் ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதி – ரசிகர்கள் சோகத்துடன் பிரார்த்தனை

“எனவே இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் இருந்து கடினமாக உழைத்து முன்னேற முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் போது திருப்தியடையும் வகையில் செயல்படு. விளையாட்டு வீரர்களாக நாம் எப்போதும் தொடர்ந்து உழைக்க வேண்டும் எஞ்சியதை உழைப்பு பார்த்துக் கொள்ளும்” என்று ஊக்குவித்தார்” என கூறினார். அப்படி சச்சினின் வார்த்தைகளால் கடந்த சயீத் முஷ்டக் அலி கோப்பையில் 320 ரன்களும் ரஞ்சி கோப்பையில் 571 ரன்களை எடுத்த அவர் தற்போது 2023 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 3 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு பெற்று 334* ரன்கள் எடுத்து அசத்தி வருகிறார்.

Advertisement