எத்தனையோ வீரர்களை உருவாக்கிய என்னை சிறந்த கிரிக்கெட்ராக மாற்றியது அவர் தான் – மனம் திறக்கும் கங்குலி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் அழுத்தமான செமி பைனலில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கொஞ்சமும் போராடாமல் இந்தியா தோற்றத்தை பார்த்த நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வேதனை அடைந்தார்கள். அதனால் தற்சமயத்தில் முன்னாள் ஜாம்பவான் கேப்டன்கள் சௌரவ் கங்குலி மற்றும் எம்எஸ் தோனி போன்ற ஒருவர் நமக்கு கேப்டனாக கிடைக்கவில்லையே என்று கிட்டத்தட்ட அனைத்து இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வருந்துவதை பார்க்க முடிகிறது.

Ganguly-dhoni

- Advertisement -

அதில் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற தோனி உட்பட ஏராளமான தரமான வீரர்களை வளர்த்து இந்திய கிரிக்கெட்டை வளமாக மாற்றியவர் சௌரவ் கங்குலி ஆவார். குறிப்பாக 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கித் தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், ஜஹிர் கான், எம்எஸ் தோனி என திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை கொடுத்து தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக குறுகிய காலத்திலேயே இந்தியாவை வெற்றி நடை போட வைத்தார்.

மானசீக பார்ட்னர்:

சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்களை வத்து தான் 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளை தோனி வென்றார். அத்துடன் அவர் உருவாக்கிய வீரர்கள் யாருமே சோடை போனதாக சரித்திரம் இல்லை என்று கூறலாம். அப்படி எத்தனையோ தரமான வீரர்களை உருவாக்கிய தம்மை முழுமையான கிரிக்கெட்டராக மாற்றிய பெருமை சச்சின் டெண்டுல்கரை சேரும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஓப்பனிங் ஜோடியாக சேர்ந்து எதிரணிகளை பந்தாடியை இவர்கள் உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியாக உலக சாதனை படைத்துள்ளதை அனைத்து ரசிகர்களும் அறிவார்கள்.

Ganguly-1

அதே போல் மற்றொரு அதிரடி வீரர் சேவாக் உடன் ஓப்பனிங் ஜோடியாக விளையாடியிருந்தாலும் சச்சினுடன் விளையாடியதே தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கும் கங்குலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சேவாக் அதிரடியில் பைத்தியத்தை போன்றவர் ஆனால் சச்சின் மிகவும் விவேகமானவர். அதனால் சச்சினுடன் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். சொல்லப்போனால் சச்சின் தான் என்னை ஒரு சிறந்த வீரராக மாற்றினார். உண்மையில் அவர் தான் என்னுடைய ஆட்டத்தின் தரத்தை உயர்த்தினார்”

- Advertisement -

“அந்த வகையில் சச்சின் எப்போதும் எனக்கு ஸ்பெஷலானவர். அதே போல் நானும் அவருக்கு நெருக்கமானவன். ஒருமுறை அவருக்கு விலா எலும்பில் அடிபட்டதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஒரு சத்தம் கேட்டேன். அதனால் நான் அவரிடம் சென்று நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அவர் நலமாக இருக்கிறேன் என்று கூறினார். அப்படி அர்ப்பணிப்புடன் எதுவுமே தெரிவிக்காமல் அவர் ரன்கள் குவித்தார். ஆனால் மறுநாள் காலை அவருக்கு விலா எலும்புகளில் இரட்டை முடிவு ஏற்பட்டது” என்று சச்சினை பற்றி வியந்து பேசினார்.

Ganguly

மேலும் இலங்கையின் முத்தையா முரளிதரன் தாம் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்த அவர் 2001இல் இங்கிலாந்து மண்ணில் வென்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர் மற்றும் யாராலும் மறக்க முடியாத ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டி ஆகியன இந்திய கிரிக்கெட்டை தலைகீழாக மாற்றியதாக மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

“வயதாக அதிகமாக அதிகமாக அவர் சிறந்தவராக உருவெடுத்தார். அந்த வகையில் மூத்த வயதில் இருந்த முரளிதரனை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். 2001இல் சொந்த மண்ணில் பதிவு செய்த அந்த வெற்றியே இந்திய அணியை முழுமையாக மாற்றியது. அந்த வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

Advertisement