
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அத்தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக அத்தொடரின் 4வது போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கில் 103, ராகுல் 90 ரன்கள் அடித்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள்.
அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார். அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று நினைத்த பென் ஸ்டோக்ஸ் அவர்களுடைய சதத்தை தடுக்கும் நோக்கத்தில் போட்டியை முடித்துக் கொள்ள வந்தார். ஆனால் அதை கேப்டன் கில் ஏற்காததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா சுந்தர் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
அப்போது இந்தியா கிரிக்கெட்டை நேர்மையாக விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடியதாக இங்கிலாந்தினர் விமர்சித்தார்கள். இந்நிலையில் சுந்தர், ஜடேஜா சதத்தை தடுக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து போட்டியை நிறுத்த முயற்சித்தது நேர்மைத்தன்மையா? என்று சச்சின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் கடைசிப் போட்டியில் சிக்சர்களை பறக்க விட்டு இந்தியாவின் வெற்றிக்கு உதவிய தமிழக வீரர் சுந்தரை பாராட்டியுள்ள அவர் இது பற்றி ரெடிட் இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு.
“வாஷிங்டன், ஜடேஜா சதத்தை அடித்து கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மையாக இருக்கக்கூடாதா? அவர்கள் டிராவை செய்வதற்காக விளையாடினார்கள். அதற்காக நாள் முழுவதும் பேட்டிங் செய்த அவர்கள் இங்கிலாந்தின் அனைத்து சவால்களையும் சமாளித்தனர். அதனால் தொடர் உயிருடன் இருந்தது. எனவே அவர்கள் இங்கிலாந்துடன் கை கொடுத்து இங்கிலாந்து பவுலர்களுக்கு ஏன் ஓய்வு கொடுக்க வேண்டும்?”
“அவர்கள் சதத்தை நெருங்கிய போது பந்தை ஹாரி ப்ரூக் கையில் கொடுத்தது பென் ஸ்டோக்ஸ் முடிவு. அது இந்தியாவின் பிரச்சனையல்ல. இந்தியா ட்ராவுக்காக விளையாடினார்கள், சதத்துக்காக அல்ல என்பது உண்மையே. ஒருவேளை ஜடேஜா, சுந்தர் ஆரம்பத்திலேயே அவுட்டாகியிருந்தால் நாம் தோற்றிருப்போம். அவர்கள் விளையாட வந்த போது ப்ரூக் பவுலிங் செய்யவில்லை”
இதையும் படிங்க: ஆல்டைம் பெஸ்ட் ஐ.பி.எல் பிளேயிங் லெவனை அறிவித்த ஏ.பி டிவில்லியர்ஸ்.. கேப்டன் யார்? – லிஸ்ட் இதோ
“இந்த விவகாரத்தில் நான் இந்திய அணி, கம்பீர், கில், சுந்தர், ஜடேஜாவின் பக்கம் 100% இருப்பேன். கடைசிப் போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழலில் சுந்தர் அதை செய்தார் அல்லவா? 4வது போட்டியில் நங்கூரமாக விளையாட வேண்டிய சமயத்திலும் சுந்தர் நின்றார் அல்லவா? கடைசிப் போட்டியில் அடித்து நொறுக்க வேண்டிய சமயத்திலும் சுந்தர் அடித்து நொறுக்கினார். எனவே வெல்டன்” என்று பாராட்டியுள்ளார்.