- Advertisement -
ஐ.பி.எல்

என்னப்பா இப்படி அடிக்கிறீங்க.. நல்லவேளை லக்னோ இதை செய்யல.. ஹெட் – அபிஷேக்கை பாராட்டிய சச்சின்

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் எதிரணிகளை அடித்து துவைத்து வருகிறது என்றே சொல்லலாம். ஏற்கனவே பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்த அந்த அணி அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அத்துடன் 5 ஓவரில் 100 ரன்கள், பவர்பிளேவில் 125 ரன்கள் குவித்த ஹைதெராபாத் இரட்டை உலக சாதனையையும் படைத்தது.

அந்த நிலையில் மே எட்டாம் தேதி நடைபெற்ற 58வது லீக் போட்டியில் லக்னோவை தாறுமாறாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ வெறும் 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சச்சின் வியப்பு:
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஹைதராபாத் அணியும் திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் லக்னோ அணியின் பேட்டிங்கை பார்த்த அனைவருமே பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக நினைத்தனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதை காண்பித்த ஹைதராபாத் டிராவிஸ் ஹெட் 89* (30), அபிஷேக் சர்மா 75* (28) ரன்கள் அடுத்த உதவியுடன் 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 150+ ரன்கள் இலக்கை வேகமாக சேசிங் செய்த அணி என்ற வரலாற்றையும் ஹைதராபாத் படைத்தது. அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் போராடாமலேயே படுதோல்வியை சந்தித்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சென்றது.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ மட்டும் டாஸ் வென்று முதலில் பந்து வீசியிருந்தால் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் 300 ரன்கள் அடித்திருப்பார்கள் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இன்றிரவு அமைக்கப்பட்ட ஒரு அழிவுகரமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குறைத்து மதிப்பிடப்படும்”

இதையும் படிங்க: சுயமரியாதை இருந்தா இதை செய்ங்க.. தோனியை போல ராகுலை அவமானப்படுத்திய லக்னோ ஓனர்.. ரசிகர்கள் அதிருப்தி

“ஒருவேளை இந்த சிறுவர்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் 300 ரன்கள் எடுத்திருப்பார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணி இப்போட்டியில் இருந்த ஃபார்முக்கும் லக்னோ சுமாராக பந்து வீசியதற்கும் முதலில் பேட்டிங் செய்திருந்தால் 300 ரன்கள் அடித்திருக்கப்படும். மொத்தத்தில் கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்ற வகையில் ஹைதராபாத் எதிரணிகளை பந்தாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -