- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் மேட்ச்லயே இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு.. நிதிஷ் ரெட்டியுடன் சுந்தரையம் பாராட்டிய ஜாம்பவான் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 274 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பின் களமிறங்கிய இந்தியா 3வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்தாலும் ரோஹித் சர்மா 3, விராட் கோலி 36, ராகுல் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதே போல ரவீந்திர ஜடேஜா 17, ரிஷப் பண்ட் 28 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

நிதிஷ் அசத்தல்:

அப்போது 8வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள். அதில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்து அவுட்னார். ஆனால் மறுபுறம் நித்திஷ் ரெட்டி அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை அடித்து 105* ரன்களுடன் உள்ளனர்.

தற்சமயத்தில் 116 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது. முன்னதாக இந்த தொடரில் அறிமுகமான 21 வயதாகும் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி முதல் போட்டியிலேயே 70க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் முடிந்தளவுக்கு அசத்திய அவர் இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு கை கொடுத்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

அந்த வரிசையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரை மட்டுமின்றி தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்து பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்பற்றுமாறு. “நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம். அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார்”

இதையும் படிங்க: நிதிஷ் ரெட்டியை ட்ராப் பண்ணுங்க.. 3 நாள் முந்தைய சஞ்சய் மஞ்ரேக்கர் பதிவுக்கு புமா நிறுவனம் மாஸ் பதிலடி

“இன்று அவர் அதை உச்சமாக எடுத்துக் கொண்டு இந்த தொடரின் முக்கியமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவருக்கு அற்புதமான திறமையுடன் வாஷிங்டன் சுந்தர் ஆதரவு கொடுத்தார். நன்றாக விளையாடினீர்கள்” என்று கூறியுள்ளார். அப்படி சச்சின் பாராட்டும் அளவுக்கு அசத்திய நித்திஷ் ரெட்டி மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் களமிறங்கி சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -