நிதிஷ் ரெட்டியை ட்ராப் பண்ணுங்க.. 3 நாள் முந்தைய சஞ்சய் மஞ்ரேக்கர் பதிவுக்கு புமா நிறுவனம் மாஸ் பதிலடி

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 358-9 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடி வருகிறது.

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர்களான விராட் கோலி 36, கேப்டன் ரோஹித் சர்மா 3, ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதே போல ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 17 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

நிதிஷ் அபாரம்:

அதனால் 221-7 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆன் அவமானத்தை தவிர்த்தார்கள். அந்த வகையில் நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடியில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்தும் ரெட்டி சதமடித்து 105* ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முன்னதாக இந்தத் தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி முதல் போட்டியிலேயே 70க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை இந்தப் போட்டியில் நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்திருந்தார். குறிப்பாக இந்திய அணியின் சமநிலைக்காக நித்திஷ் ரெட்டியை நீக்குவது சரியாக இருக்குமா? என்று அவர் ட்விட்டரில் டிசம்பர் 25ஆம் தேதி மதியம் 1.27 மணிக்கு பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

சிக்கிய மஞ்ரேக்கர்:

ஆனால் கடைசியில் பார்த்தால் நிதிஷ் ரெட்டி தான் சதத்தை அடித்து இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்தை தற்போது இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் தேடிக் கொண்டு கலாய்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல விளையாட்டு உபகரணங்கள் நிறுவனமான புமாவும் அவரை கலாய்த்துள்ளது.

இதையும் படிங்க: 196 நிமிடத்தில் வெறும் 1 தான்.. விராட், ரோஹித்துக்கு பாடம் எடுத்த தமிழக வீரர் சுந்தர்.. இதை கவனிச்சிங்களா?

குறிப்பாக நித்திஷ் ரெட்டி தன்னுடைய கையில் பேட்டை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை அவருக்கு புமா பதிலடியாக பதிவிட்டுள்ளது. அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய நிதிஷ் ஆஸ்திரேலிய மண்ணில் 8வது இடத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். மேலும் மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் சதத்தை பதிவு செய்த முதல் வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement