அவர் மட்டும் இல்லனா 2007-லயே ரிட்டையர் ஆகிருப்பேன் – மனம்திறந்த சச்சின் டெண்டுல்கர் (பேசியது என்ன?)

sachin
- Advertisement -

இந்தியாவில் இன்று கிரிக்கெட் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படுவதற்கு 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் வென்ற முதல் உலகக்கோப்பை ஆழமான விதை போட்டது என்றால் சச்சின் டெண்டுல்கர் அதை மிகவும் அனைவரிடமும் பிரபலப்படுத்தியவர் என்றே கூறலாம். மும்பையில் பிறந்து 16 வயது பிஞ்சு காலுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்திலேயே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட காரணத்தாலேயே நாளடைவில் கிளென் மெக்ராத், பிரெட் லீ, சோயப் அக்தர் என உலகின் அத்தனை தரமான பவுலர்களையும் அற்புதமாக எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார்.

Sachin

- Advertisement -

செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து சவாலான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது 24 வருடங்கள் சுமந்து நிறைய சாதனைகளை படைத்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதிலும் 90களில் சச்சின் அடித்தால் தான் வெல்ல முடியும் என்ற நிலைமையால் அவர் அவுட்டானதும் இந்தியாவில் அணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் கணக்கிட முடியாததாக இருந்தது. அந்தளவுக்கு தரத்திலும் தரமான அவர் நவீன கிரிக்கெட்டில் தோனி முதல் விராட் கோலி வரை அனைத்து இந்திய வீரர்களுக்கும் வருங்காலங்களில் வரவிருக்கும் இளம் வீரர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

அவர் மட்டும் இல்லனா:

அந்த வகையில் கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்திய ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அதற்கு நிகராக தன்னுடைய 24 வருட கேரியரில் ஏராளமான சவால்களையும் சந்தித்தவர். குறிப்பாக கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடும் ஒருவர் காயம் மற்றும் சுமாரான பார்ம் ஆகியவற்றை சந்திக்காமல் விளையாடவே முடியாது என்பதது எழுதப்படாத விதியாகும். அதற்கு விதிவிலக்காகாமல் ஏராளமான காயங்களை சந்தித்து அவ்வப்போது பார்மையும் இழந்த சச்சின் அதற்காக துவளாமல் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றி நாயகனாக கடந்த 2013இல் சொந்த மண்ணில் ஓய்வு பெற்றார்.

richards

முன்னதாக எத்தனையோ சாதனைகளை அசால்டாக செய்த அவர் உலக கோப்பையை வெல்லும் போராட்டத்தில் கடந்த 2011இல் தன்னுடைய கடைசி முயற்சியில் போராடி வென்றார். ஆனால் அதற்கு முன்பாக 2007இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலக கோப்பையில் வெறும் 64 ரன்கள் எடுத்து சுமாராக செயல்பட்டதால் பேசாமல் ஓய்வு பெற்று விடலாம் என்று முடிவெடுத்ததாக தற்போது அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான் அந்த முடிவிலிருந்து தம்மை வெளியே கொண்டு வரும் அளவுக்கு உத்வேக வார்த்தைகளை கொடுத்து மீண்டும் விளையாட உதவியதாக தெரிவிக்கும் சச்சின் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு : “2007இல் நான் ஓய்வு பெற்று விடலாம் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அப்போது ஆண்ட்டிகுவாவிலிருந்து என்னை போனில் தொடர்பு கொண்ட சர் விவ் ரிச்சர்ட்ஸ் உங்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளது என்பது போன்ற உத்வேக வார்த்தைகளை கொடுத்தார்.

Sachin

கிரிக்கெட்டில் எனக்கு இருவர் மட்டுமே ரோல் மாடல்கள். அதில் ஒருவர் சர் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றொருவர் சுனில் கவாஸ்கர். அதில் ரிச்சர்ட்ஸ் அவர்களின் நடை, பாவனை, பேட்டிங் மற்றும் ஸ்டைல் என அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவருடைய பாடி லாங்குவேஜ் என்னை மிகவும் கவர்ந்தது. 1992இல் சஞ்சய் மஞ்சரேக்கருடன் மெல்போன் நகரில் நான் இருந்தேன்”

இதையும் படிங்க : இந்தியாவை தொடர்ந்து டி20 உலககோப்பை பைனலில் மோசமான – உலகசாதனையை நிகழ்த்திய பாகிஸ்தான்

“அப்போது ஜென்டில்மேனான அவர் நாங்கள் இருந்த ஹோட்டலுக்கு வந்தார். அவருடைய நடையை பார்த்த நான் 18 வயதிலிருந்து 12 வயது குறைந்ததாக உணர்ந்தேன். அப்போது மஞ்ரேக்கரிடம் நான் “சாப்பாடு மற்றும் ஷாப்பிங்கை மறந்து விட்டேன். இப்போது அவரை எப்படியாவது பார்க்க வேண்டும்” என்று கூறினேன். அதன் பின் நானும் சஞ்சயும் அவருடைய அறைக்கு சென்றோம். அப்போது தான் முதல் முறையாக ரிச்சர்ட்ஸ் அவர்களை சந்தித்தேன்” என்று கூறினார்.

Advertisement