ரொம்ப நன்றி சார்.. இரட்டை சதத்துக்கு சச்சின் தெரிவித்த வாழ்த்து பற்றி பகிர்ந்த ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal 6
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் 35 ரன்கள் கூட எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்தினர்.

இருப்பினும் அதே இங்கிலாந்துக்கு எதிராக தனி ஒருவனாக சவாலை கொடுத்த இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார். அதே போல 2வது இன்னிங்சில் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 399 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியாவுக்கு பும்ரா, அஸ்வின் ஆகியோர் தேவையான விக்கட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

வாழ்த்திய சச்சின்:
இந்நிலையில் 2வது போட்டியில் இரட்டை சதமடித்ததற்காக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தம்மை அழைத்து வாழ்த்தியதாக யசஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தன்னுடைய முதல் போட்டியிலேயே இரட்டை சதம் தவறியதைப் பற்றிய விவரத்தை ஜியோ சினிமா சேனலில் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கரிடம் நான் பேசினேன்”

“அப்போது வாழ்த்து தெரிவித்த அவர் தற்போது போலவே தொடர்ந்து கடினமாக உழைக்குமாறு சொன்னார். மேலும் இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் தொடர்ந்து ரன்கள் குவிப்பது முக்கியம் என்றும் அவர் என்னிடம் சொன்னார். உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சார். நான் எப்போதும் உங்களை ரோல் மாடலாக ரசிக்கிறேன். கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நான் 171 ரன்கள் அடித்த போது அதை இரட்டை சதமாக மாற்ற முயற்சித்தும் நடக்கவில்லை”

- Advertisement -

“என்னுடைய அன்றாட வாழ்வில் முன்னேறுவதற்கு நான் கவனம் செலுத்தினால் ரன்கள் என்னை தேடி வரும் என்று நான் நினைப்பேன். குறிப்பாக தூங்கும் நேரம் என்ன, எந்த உணவு சாப்பிட வேண்டும், எப்படி பயிற்சி எடுக்க வேண்டும் போன்றவற்றில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். அந்த வகையில் கடினமான உழைப்பை போட்டுள்ளதால் களத்திற்கு செல்லும் போது என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்”

இதையும் படிங்க: அந்த சின்ன தப்பை செய்யாம.. மறுபடியும் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிக்கும்.. அலெஸ்டர் குக் நம்பிக்கை

“எப்போதும் நான் அணிக்காக விளையாட விரும்புகிறேன். கடந்த போட்டியில் என்னிடம் உள்ள அனைத்து வகையான ஷாட்டுகளையும் பயன்படுத்தி விளையாடுமாறு அணி நிர்வாகம் சொன்னார்கள். அந்த சூழ்நிலையில் இப்போட்டியின் மைதானம் நன்றாக இருந்ததால் நான் பொறுமையுடன் விளையாடினேன். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் இழந்ததால் பொறுப்புடன் நின்று கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்” எனக் கூறினார்.

Advertisement