- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்தில் இந்த 3 விஷயத்தை மனசுல வெச்சு ஆடுனா ஜெய்க்கலாம்.. இந்திய அணிக்கு சச்சின் ஆலோசனை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவமிக்கவர்கள் ஓய்வு காரணமாக இங்கிலாந்தில் விளையாடப் போவதில்லை. அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இளம் இந்திய இங்கிலாந்தில் அசத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் நீங்கள் விளையாடும் போது எப்போதும் 3 விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது மேல்நிலை நிலைமைகள். இரண்டாவது காற்றின் தரம், தன்மை. மூன்றாவது பிட்ச் சூழ்நிலைகள்”

- Advertisement -

சச்சின் ஆலோசனை:

“இந்த ஒவ்வொரு விஷயமும் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் செல்வாக்கை செலுத்தும். அதன் காரணமாக சில நேரங்களில் நீங்கள் பேட்டிங் செய்வதை கடினமாக உணர்வீர்கள். அது போன்ற சூழ்நிலைகளை நீங்கள் கவனமாக இருந்து கண்டறிய வேண்டும். அதற்காக அனைத்து பந்துகளையும் விடக்கூடாது. அதே சமயம் சரியான பந்துகளைத் தவற விட்டு மற்ற பந்துகளை சரியான நேரத்தில் அடிப்பதற்கான நோக்கத்தை காண்பிக்க வேண்டும்”

“சூரியன் வெளியே வரும் போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அழகாக இருக்கும். அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் அடிக்க முடியும். அப்போது தான் உங்களுடைய ஷாட்டுகளை பயன்படுத்தி அதிரடியாக விளையாட வேண்டும். முதல் போட்டி நடைபெறும் லீட்ஸ் மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தார் போல் தயாரிப்பாளர் பிட்ச்சை தயாற் செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்”

- Advertisement -

இங்கிலாந்தில் வெற்றி காண:

“இங்கிலாந்து பிட்ச்களில் எப்போதும் பச்சை புற்கள் இருக்கும். அங்கே தான் நீங்கள் நேர்மறையான மனநிலையுடன் அமைதியாக பேட்டிங் செய்ய வேண்டும். சவாலை ஏற்றுக்கொண்டு களத்திலேயே இருங்கள். சூழ்நிலைகள் எப்போது உங்களுக்கு சாதகமாக மாறி, உங்களுக்கான நேரம் வருகிறது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். இது தான் டெஸ்ட் கிரிக்கெட். இந்த சவாலான டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல வீரர்கள் மற்றும் அணிகள் அந்த சவால்களைக் கடந்து சாதிக்க வேண்டும்”

இதையும் படிங்க: அங்கயே தங்குனது மட்டுமல்ல.. பலமான சப்போர்டுடன் இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ராணா – விவரம் இதோ

“எனவே களத்தில் நேர்மறையாக இருந்து சவாலை சமாளியுங்கள் என்பதே என்னுடைய ஆலோசனையாகும். தடுப்பாட்டுத்துடன் விளையாட வேண்டிய சமயங்களில் நேர்மறையாக இருங்கள். ரன்கள் அடிக்கக்கூடியப் பகுதிகளை கண்டறியுங்கள். சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுங்கள். இப்படி விளையாடினால் தான் உங்களால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட முடியும்” என்று கூறினார்.

- Advertisement -