அங்கயே தங்குனது மட்டுமல்ல.. பலமான சப்போர்டுடன் இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ராணா – விவரம் இதோ

Harshit Rana
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 என அடுத்தடுத்து மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான அவர் தற்போது நிலையான இடத்தினை எதிர்பார்த்து உழைத்து வருகிறார்.

இந்திய அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ஹர்ஷித் ராணா :

இருப்பினும் கௌதம் கம்பீரின் ஆதரவு காரணமாக அவருக்கு இந்திய அணியில் தொடர் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக கௌதம் கம்பீர் மென்டராக செயல்பட்ட போது அவரது ஆதரவின் காரணமாக கொல்கத்தா அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்த அவர் அந்த அணியின் வெற்றிக்கும் உதவி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர்மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ள கம்பீர் தொடர்ச்சியாக ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இருப்பினும் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் முதன்மை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆனாலும் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடு இருந்தார். பின்னர் இந்திய ஏ அணி தங்களது பயிற்சி போட்டிகளை முடித்து நாடு திரும்பிய வேளையில் இந்திய முதன்மை அணியில் இடம்பெறாத ஹர்ஷித் ராணா மட்டும் இங்கிலாந்திலேயே தங்குமாறு பிசிசிஐ-யால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

- Advertisement -

அப்படி இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்து வந்த ஹர்ஷித் ராணாவை தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைத்துள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

இதையும் படிங்க : 11 வயசுல இருந்து ஒன்னா விளையாடுறோம்.. அவரை பத்தி எனக்கு தெரியாதா? கருண் நாயருக்கு ஆதரவாக – கே.எல் ராகுல் பேச்சு

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சில முக்கிய வீரர்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் காயம் ஆகியவை இருப்பதினால் இந்த பெரிய தொடரின் இடையே யாரேனும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவை சேர்த்துள்ளதாக பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது.

Advertisement