நான் பார்த்து பயந்த ஒரே பவுலர் இவர்தான். நிறைய முறை அவரிடம் அவுட் ஆகி இருக்கிறேன் – சச்சின் கூறிய அந்த பவுலர் யார் தெரியுமா ?

sachin
- Advertisement -

இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசியது மட்டுமின்றி 343567 ரன்களை குவித்துள்ளார். தான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் அசாத்தியமான பல பவுலர்களை எதிர்த்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார் சச்சின்.

- Advertisement -

மேலும் யாரும் நினைத்து பார்க்காத நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். உலக அளவில் சிறந்த துவக்கம் வீரரான இவர் பாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் மற்றும் மீடியம் பாஸ்ட் என அனைத்துவிதமான பந்துகளையும் அடிக்கக் கூடியவர் அது மட்டுமின்றி இந்தியா மட்டுமல்லாது, துணைக்கண்டம் மட்டுமில்லாது அனைத்து கண்டத்திலும் அடித்து நொறுக்கினார்.

மேலும் உலக அளவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அனைத்து நாடுகளிலும் அபாரமாக ஆடி சதம் அடித்தவர். சச்சினுக்கு கவர் டிரைவ், புல் ஷார்ட், பிலிக்ஷார்ட், ஸ்வீப் ஷாட், கட் ஷாட் என அனைத்தும் அத்துப்படி. அந்த வகையில் தனது நேர்த்தியான அருமையான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருக்கும் சச்சின் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு பேட்டிங்கில் பல சாதனை புரிந்த சச்சின் தான் விளையாடிய காலத்தில் கடினமான ஒரு பவுலரை எதிர் கொண்டது குறித்து ஏற்கனவே பழைய பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுவொரு பழைய பேட்டியாக இருந்தாலும் அந்த பேட்டி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதில் சச்சின் கூறியதாவது :தென் ஆப்பிரிக்க அணியின் ஹன்சி குரான்ஞ் பவுலிங்கில் தான் நான் அதிகமாக பயந்து இருக்கிறேன். நான் களத்தில் நன்றாக செட்டில் ஆகி விட்டால் கூட அவரது பந்து வீச்சில் மிக கவனமாக எதிர்கொள்வேன் .தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடும் போது ஆலன் டொனால்ட் ஷான் பொல்லாக் போன்றவர்கள் பவுலிங்கை நான் ஆடி கொள்கிறேன் நீங்கள் எனக்காக அவரது பவுலிங்கில் ஆடுங்கள் என்று எத்தனையோ முறை எனது பேட்டிங் பாட்னரிடம் கேட்டு இருக்கிறேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

HANSIE CRONJE / SOUTH AFRICA

மேலும் சச்சின் விளையாடிய காலத்தில் மெக்ராத், வார்னே, சமிந்தா வாஸ், முரளிதரன், பொல்லாக், டொனால்டு, பிரெட் லீ, அக்தர் போன்ற பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை சந்தித்த சச்சின் தென்னைப்பிரிக்க அணியின் ஹன்சி குரான்ஞ்யை கடினமான பவுலர் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement