Virat Kohli : எனக்கு ஏற்பட்ட சுமைபோல விராட் கோலிக்கு ஏற்பட கூடாது – சச்சின் ஓபன் டாக்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Sachin
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

kohli1

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் பேட்டிங் சுமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணி சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் விராட் கோலியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலேயே அளிக்க வேண்டும். ஏனெனில் ஒரே ஒரு வீரரின் ஆட்டத்தை வைத்துக் கொண்டு உலக கோப்பை தொடரை வெற்றி பெறுவது என்பது கடினம்.

virat1

ஆகவே அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 1996, 1999, 2003 போன்ற உலக கோப்பை தொடர்களில் எனது பேட்டிங்கை மட்டும் இங்கே அணி அதிகம் நம்பி இருந்ததால் என் மீது பேட்டிங் சுமை அதிகரித்தது. அதைப் போன்று இல்லாமல் விராத் கோலியை இந்த உலக கோப்பை தொடரில் சுதந்திரமாக ஆட விடவேண்டும். அணி வீரர்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தால் அவரால் எளிதாக ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிகரமாக இறுதிப்போட்டிக்கு வெற்றிகரமாக அழைத்து செல்ல முடியும் என்று சச்சின் கூறினார்.

kuldeep-yadav

மேலும் இந்திய அணியில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் தோனி போன்றோர் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ராகுல், பாண்டியா, சாகல் மற்றும் குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் உள்ளதால் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறேன் என்றும் சச்சின் கூறினார்.

Advertisement