ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவங்க 2 பேர் தான் ஓப்பனரா இறங்கணும் – சச்சின் அதிரடி

Advertisement

இந்திய அணி கடைசியாக 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது 71 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. அதற்கடுத்து இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதனால் வரும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி கடுமையாக போராடும் என்று கூறப்படுகிறது.

indvsaus

மேலும் கடந்த முறை அந்த அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றதால் இம்முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது சவாலான காரியமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதேவேளையில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் கோலி இந்தியா திரும்புவதால் அது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்றும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவும் விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலரும் தங்களது கருத்து தெரிவித்து வர இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட் தொடரில் துவக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

agarwal 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரின் ஒரு துவக்க வீரராக அகர்வால் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும் அவருடன் இறங்கும் பார்ட்னர் ராகுல் அல்லது ப்ரித்வி ஷா ஆகிய இருவரில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் இருவரை பொறுத்தவரை யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ ? அவர்களே இறங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து மேலும் அணி நிர்வாகம் தான் இது குறித்த முடிவு எடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Rahul

நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான பார்மை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா கடந்தகால ஆட்டத்தை வைத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் கடந்த சில தொடர்களுக்கு முன்னர் தனது டெஸ்ட் இடத்தை இழந்த ராகுல் தற்போது மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தான் விட்டுச்சென்ற இடத்தை இம்முறை சிறப்பாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

Advertisement