என்னோட புகைப்படத்தை வச்சி தப்பு பண்றாங்க. யாரும் சிக்காதீங்க ப்ளீஸ் – சச்சின் வருத்தம்

sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகள் விளையாடி எண்ணிலடங்கா பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டு வகையான கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையுடன் உள்ளார்.

ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் 2013-ஆம் ஆண்டே அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்திருந்தாலும் 48 வயதாகும் அவர் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமான ஒரு முகமாக உள்ளார்.

- Advertisement -

அதோடு இன்றளவும் அவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதோடு அவர் பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரான்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இன்னும் சச்சின் டெண்டுல்கருக்கு மவுசு இருந்து வருகிறது.

இந்நிலையில் சச்சின் தற்போது வருத்தத்துடன் ஒரு வேதனையான பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : காசினோ எனப்படும் சூதாட்ட விளம்பரங்களில் எனது புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனது முகத்தை மார்பிங் செய்து நான் கேசினோ விளையாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல விளம்பரங்கள் வெளியாகி இருப்பது எனக்கு எனது கவனத்திற்கு வந்துள்ளது.

- Advertisement -

சூதாட்டம், புகையிலை, மது இதுபோன்ற விடயங்களுக்கு நான் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்ததில்லை. அதுபோன்ற விளம்பரங்களிலும் நான் நடிக்கவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பி தவறாக வழிநடத்தும் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் துணை நிற்க மாட்டேன். இந்த விவகாரத்தில் சட்ட குழுவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : அந்த பவுலரை வெளுத்து வாங்கி நான் பெரிய ஆள் ஆகனும். அதுவே என் ஆசை – யாஷ் துள் விருப்பம்

மக்களை நல்வழியில் கொண்டு செல்வதிலேயே என்னுடைய நோக்கம் இருக்கும். அதைவிடுத்து இதுபோன்ற தவறான பகிர்வுகளை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளம் மூலமாக தனது முகம் பகிரப்பட்டு தவறான விளம்பரங்கள் தவறான செய்திகள் சென்றடைவதால் மக்கள் அதிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement