இவர்கள் மட்டும் இல்லனா கிரிக்கெட்டில் சுவாரஸ்யமே இருக்காது. இந்த நிலைமை வரக்கூடாது – சச்சின் பேட்டி

Sachin
- Advertisement -

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . கடந்த 2013-ம் ஆண்டில் கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்படியிருந்தும் தற்போது வரை இவருக்கான மவுசு குறையவில்லை. நேற்று மட்டும் ட்விட்டரில் 3 ஹேஷ் டேக்குகள் ட உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Sachin

- Advertisement -

இப்படி இருக்க கரொனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுருத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதனைத் தாண்டி இன்று தினத்தந்தி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

இந்தப் பேட்டியில் கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் லாராவின் 400 ரன்களை யார் முறியடிப்பார்கள். அப்போது உள்ள இந்திய அணிக்கும் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும் என்ன வித்தியாசம் மேலும் ஊரடங்கு வீட்டில் எவ்வாறு நாளை கழிக்கிறார் போன்ற பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

Ind

அப்படி பகிர்ந்துகொண்ட பல விடயங்களில் முக்கிய விடயமாக ரசிகர்கள் கேட்டுக்கொண்டபடி இனிவரும் போட்டிகளை பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த சச்சின் பதிலளிக்கையில் :ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் விளையாடுவது என்பது நன்றாக இருக்காது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கும் சூழலில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

- Advertisement -

அதிலும் கிரிக்கெட்டில் பவுண்டரி, சிக்சர் அடிக்கும் போதும், விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும் மைதானத்தில் கேட்கும் ரசிகர்கள் சத்தமே அவர்களின் ஒரு கொண்டாட்டத்தின் பகுதியாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி அது அவர்களுக்கு உணர்வுபூர்வமாக ஒரு உற்சாகத்தை வழங்கக் கூடியதாக இருக்கும்.

IND-2

ஆகையால் ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் போட்டியை நடத்தும் சூழல் இப்போதும் வரக் கூடாது. ஏனென்றால் வீரர்களின் உற்சாகம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது அதுமட்டுமின்றி சுவாரசியமே இல்லாமல் போய்விடும் என்று சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement