தமிழில் எனக்கு தெரிந்த வார்த்தைகள் இவைதான் – பிறந்தநாள் அன்று சச்சின் ஓபன் டாக்

sachin
- Advertisement -

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . கடந்த 2013-ம் ஆண்டில் கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்படியிருந்தும் தற்போது வரை இவருக்கான மவுசு குறையவில்லை. இன்று மட்டும் ட்விட்டரில் 3 ஹேஷ் டேக்குகள் ட உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Sachin

- Advertisement -

இப்படி இருக்க கரொனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுருத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதனைத் தாண்டி இன்று தினத்தந்தி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

இந்தப் பேட்டியில் கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் லாராவின் 400 ரன்களை யார் முறியடிப்பார்கள். அப்போது உள்ள இந்திய அணிக்கும் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி க்கும் என்ன வித்தியாசம் மேலும் ஊரடங்கு வீட்டில் எவ்வாறு நாளை கழிக்கிறார் போன்ற பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதுமட்டுமில்லாமல் யுவராஜ் சிங் குரிய கருத்துக்களுக்கும் பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் அதன் பின்னர் சென்னை மைதானம் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது : எப்பொழுதும் சென்னை எனக்கு மிகவும் பிடித்த மைதானம் இந்தியாவிலே எனக்கு மிகப் பிடித்த மைதானம் என்றால் அது சென்னைதான் என்று நான் வெளிப்படையாக நிறைய முறை கூறி இருக்கிறேன்.

- Advertisement -

சென்னைவாசிகள் மிகவும் அன்பானவர்கள் எனக்கு அதிகம் ஆதரவு கொடுத்தவர்கள் சென்னை ரசிகர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்காக அளவிட முடியாத அன்பினை கொடுத்துள்ளனர். சென்னை ரசிகர்கள் முன்பு எனக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடிக்கும். மேலும் தமிழில் எனக்கு தெரிந்த சில வார்த்தைகள் உள்ளன.

Sachin

அவைகளில் முக்கியமானவை “தண்ணீர் கொடு” “முன்னாடி” “பின்னாடி” என சில வார்த்தைகளை எனக்கு தமிழ் தெரியும் என்றும் சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement