என் பையன் கிரிக்கெட் விளையாடி இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை – சச்சின் சொன்ன காரணம்

Arjun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் 1989-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக வலம்வந்த அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையும் அவர் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

arjun tendulkar

- Advertisement -

தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகன் கிரிக்கெட் விளையாட வந்துள்ளது நாம் அறிந்ததே. இலங்கை அணிக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 இந்திய அணியில் இடம் பிடித்த அவர் தற்போது 22 வயது ஆனாலும் தன்னுடைய இடத்தை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். என்னதான் கிரிக்கெட்டில் சச்சின் மிகப்பெரிய வீரராக இருந்தாலும் அவரது மகன் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பினை பெற முடியும் என்பதற்காக தற்போது கடினமாக உழைத்து வருகிறார்.

22 வயதான இவர் கடந்த ஆண்டுதான் சையது முஷ்டாக் அலி தொடரில் ஹரியானா அணிக்கெதிராக மும்பை அணியில் அறிமுகமானார். இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் ஒருவருக்கு 9 ரன்களுக்கு மேல் வழங்குவதால் அவருடைய பந்துவீச்சை சுமாராக உள்ளது என்றே கூறலாம். மேலும் பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர் பேட்டிங்கிலும் பெரிய அளவில் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் தந்தையின் நிழலில் இருந்து வெளியே வந்து தான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்பதற்காக தற்போது கடினமாக முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி 30 லட்சத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த சில சீசன்களாக மும்பை அணிக்கு நெட் பவுலராக இருந்த அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த ஆண்டு மும்பை அணி 20 லட்ச ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனாலும் அவருக்கு மும்பை அணியில் இதுவரை விளையாட ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் அவர் 30 லட்சத்திற்கு ஏலம் போகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தனது மகனின் ஆட்டம் குறித்து சச்சின் தற்போது வெளிப்படையாக ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்போதுமே என் மகன் விளையாடி நேரில் பார்த்ததில்லை. ஏனெனில் பெற்றோர்களாகிய நாம் குழந்தைகள் விளையாடுவதை நேரில் பார்க்கும் போது அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். அதோடு நாம் நேரில் பார்க்கிறோம் என்பதற்காக அவர்கள் பதட்டம் அடைவார்கள். இதனை தவிர்க்கவே நான் அர்ஜுன் விளையாடுவதை நேரில் பார்ப்பது இல்லை.

இதையும் படிங்க : உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும் – கோலிக்கு சச்சின் கொடுத்த பரிசு

மேலும் அவன் எந்த அழுத்தமும் இல்லாமல் கிரிக்கெட்டை நேசித்து விளையாட வேண்டும். அப்போதுதான் அவனால் பெரிய வீரராக மாற முடியும் என்பதாலும் நான் நேரில் செல்வது கிடையாது. அவனுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக நான் அவர் விளையாடுவதை நேரில் போய் பார்ப்பது கிடையாது. அதையும் மீறி நான் அவரது ஆட்டத்தை பார்க்க விரும்பினால் எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டுதான் பார்பேன். அது அர்ஜுனுக்கும் அவரது பயிற்சியாளருக்கும் கூட தெரியப்படுத்தாமல் மறைமுகமாக ஒளிந்திருந்து பார்க்க விரும்புகிறேன் என்று சச்சின் வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement