NED vs RSA : நெதர்லாந்து தான் ஜெயிக்கும் என்பதை முன்கூட்டியே கணித்த சச்சின் – வைரலாகும் பதிவு

Sachin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வரலாற்று வெற்றிகளை பதிவு செய்து வரும் வேளையில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்கிற வேளையில் நெதர்லாந்து அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக குரூப் இரண்டில் இந்தியாவுடன் சேர்ந்து அரையிறுதிக்கு செல்லும். இந்த உலகக் கோப்பை தொடரில் சைலன்டாக தங்களது வேலையை சிறப்பாக செய்து வந்த தென்னாப்பிரிக்கா அணியானது இன்றைய போட்டியில் தோற்று மீண்டும் ஒருமுறை பெரிய ஆட்டங்களில் தோல்வி பெறும் அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்க அணி தோற்றது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சூப்பர் 12 சுற்றின் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் அடிலெயிடு மைதானத்தில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளித்து 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது.

பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவு எட்டு விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நெதர்லாந்து அணி தான் வெற்றி பெறும் என்பதை இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சரியாக கணித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்று காலை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : “நான் எனது நண்பருடன் காலை உணவிற்காக வெளியே சென்று இருந்தேன்”.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த டாப் 5 கேப்டன்களின் பட்டியல்

அப்போது அவரிடம் காலை உணவு சாப்பிட நெதர்லாந்து செல்லலாமா? என்று கேட்டேன் எனது இந்த கேள்வியை கண்ட எனது நண்பர் திகைத்து விட்டார் என சச்சின் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் நெதர்லாந்து அணிதான் இந்த போட்டியில் வெல்லும் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளதாக இந்த பதிவு வெளிகாட்டுகிறது.

Advertisement