இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு சர்வதேச பவுலர்களும் பேட்ஸ்மேன்களிடம் சிக்கி கன்னா பின்னா என்று அடி வாங்கி வரும் நிலையில் இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் பலர் இந்த தொடரில் அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேயில் பந்துவீசும் பணியை செய்து வருகிறார். கோலியும் அவருக்கு தொடர்ந்து பவர் பிளே ஓவர்களில் பந்துவீச அனுமதித்து வருகிறார். இதுவரை இந்தத் தொடரில் பவர் பிளே ஓவர்கள் பந்துவீசி உள்ள சுந்தர் 5 ரன்களை மட்டுமே சராசரியாக விட்டுக் கொடுத்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக மும்பை அணிக்கு எதிராக பவர் பிளே மற்றுமின்றி தொடர்ந்து 4 ஓவர்களை வீசினர். அந்த போட்டியில் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி அதுமட்டுமின்றி அந்த ஓவரில் 2 இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அந்த போட்டியின் போது முக்கிய பந்துவீச்சாளர்கள் சைனி, சாஹல் என அனைவரும் 40 ரன்களுக்கு மேல் விட்டு கொடுக்க சுந்தர் மட்டும் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த திறமையை பாராட்டி உள்ள சச்சின் டெண்டுல்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் :
Just shows how important @Sundarwashi5’s first spell is. He has given away just 20 runs in his 4 overs while bowling in the powerplay when the other 4 have gone for 55.#RCBvDC #IPL2020
— Sachin Tendulkar (@sachin_rt) October 5, 2020
வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார். பேட்ஸ்மேன்களின் நகர்வுகளை கணித்து தன்னுடைய பந்துவீச்சில் கடைசி நேரங்களில் மாற்றங்களை செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார் என்று சச்சின் பாராட்டியுள்ளார். இதுவரை சிறப்பாக வீசி வரும் சுந்தர் இந்திய அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.