இவர் தான் என்னை போன்றே ஆடுகிறார். பார்த்த 15 நிமிடத்தில் என்னை கவர்ந்தார் – இளம்வீரரை புகழ்ந்த சச்சின்

sachin
- Advertisement -

அந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய போது அதில், ஜாம்பவான் டான் பிராட்மன் ”இந்தச் சிறுவன் என்னைப் போலவே ஆடுகிறான்” என்று கூறி சச்சின் டெண்டுல்கரை விண்ணுயர புகழுக்கு உயர்த்தினார். அது போலவே சச்சின் டெண்டுல்கரை தற்போது ஒருவரைப்பற்றி தன்னைப் போலவே ஆடுகிறார் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

sachin
sachin

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த காட்டுத்தீ நிவாரண நிதிக்காக நடக்கும் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இந்த போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்-இடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதில் ஒரு கேள்வியாக தற்கால கிரிக்கெட்டில் உங்களைப்போலவே ஆடும் ஒரு வீரர் யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு அனைவரும் அவர், விராட்கோலி கூறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷானேவை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது :

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை பார்த்தேன். இதில் ஸ்டீவ் ஸ்மித் காயம் அடைந்த பிறகு அவருக்கு மாற்றாக வந்த மார்னஸ் லபுஷான் ஆடிய இரண்டாவது இன்னிங்சை முற்றிலும் பார்த்தேன். எனது மாமனார் உடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

Marnus

அப்போது சோப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்தில் தலையில் அடி வாங்கினார். அதன்பிறகு அவரது 15 நிமிட பேட்டிங்கை உற்றுப் பார்த்தேன். இந்த வீரர் நிச்சயம் ஒரு ஸ்பெஷல் வீரர் தான் என்று என் மாமனாரிடம் கூறினேன்.

Marnus 1

அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது அவருடைய கால் நகர்வு அற்புதமாக, துல்லியமாக இருக்கிறது. கால் நகர்வு வெறுமனே வந்து விடாது. அது உடல் ரீதியானது மட்டுமல்ல, மனரீதியானதும் கூட. மனதளவில் உங்களுக்கு பந்தை ஆடுகின்ற பாசிட்டிவ் எண்ணம் இல்லை என்றால் சரியாக கால் நகர்வு வராது . பந்தில் அடி வாங்கிய பிறகு ஒருவர் மனதளவில் வலிமையானவர் ஆக இல்லை என்றால் கால் நகர்வு வரவே வராது. ஆனால் அவரிடம் அந்த பயம் துளியும் இல்லை. அவர் என்னை போன்ற ஆடுகிறார் இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement