அஷ்வின் ஈஸியா அவரோட விக்கெட்டை எடுத்துடறாரு. அதுதான் இந்திய அணிக்கு ப்ளஸ் – சச்சின் புகழாரம்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் ஏழாம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ashwin 1

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலியும், முகமது ஷமியும் இத்தொடரில் இருந்து வெளியேறியதால் இந்திய அணி இத்தொடரில் சிரமப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இளம் வீரர்களுடன் புதிய உத்வேகத்தோடு இந்திய அணி விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஒருவர்கூட அரைசதம் அடிக்க விடாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சு குறித்து சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஸ்மித்தை அஸ்வின் திணறடித்தது சிறப்பான ஒன்று. முதல் டெஸ்ட் போட்டியில் ஆர்ம்பால் பந்துவீச்சின் மூலம் அஸ்வின் ஸ்மித்தை வெளியேற்றினார். அதன்பிறகு 2வது டெஸ்ட் போட்டியின் போது பவுன்ஸ் செய்து பந்துவீசினார்.

பந்தினை லேசாக பிடித்தும், அழுத்தி பிடித்தும் இது போன்று மாற்றி மாற்றி வீசும் பந்தினை கணிக்க முடியாமல் ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் அவரின் பந்து வீச்சுக்கு ஏற்ப பீல்களையும் செட் செய்வதால் அவரால் ஸ்மித்தை வீழ்த்த முடிகிறது. உலகத்தரம் வாய்ந்த இரு வீரர்களுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் அஸ்வின் இதுவரை வென்று விட்டார் என சச்சின் கூறியுள்ளார்.

ashwin

2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள ஸ்மித் 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அஸ்வினின் பந்து வீச்சில் 23 பந்துகளை எதிர்கொண்டு உள்ள ஸ்மித் வெறும் 4 ரன்களை மட்டும் அடித்து இரண்டு முறை அவுட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரையும் சச்சின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement