
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.
இன்று நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த விடயம் கற்பனையில்கூட நடக்காது என்பதால் கிட்டத்தட்ட பாகிஸ்தானில் நிறைய வாய்ப்பு முடிந்து விட்டது. அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்று நாம் கூற வேண்டும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடந்த மே மாதம் சச்சினிடம் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது அதற்கு பதிலளித்த சச்சின் : இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா மூன்று அணிகள் கண்டிப்பாக அரையிறுதிக்கு தகுதி பெறும் மேலும் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இந்த இரண்டு அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று அவர் கூறியிருந்தார்.
அதனைப் போன்றே தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன மேலும் நியூஸிலாந்து தகுதி பெற்றுள்ளதால் சச்சின் மே மாதம் கணிப்பு தற்போது நடந்துள்ளதால் இந்த விடயத்தை அனைவரும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.