ஸ்லெட்ஜிங் செய்ய வந்த வீரரையே மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வைத்த சச்சின் – சுவாரசிய சம்பவம் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு உலகெங்கிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வர தற்போது அவரது கிரிக்கெட் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவத்தை நாங்கள் இந்த தொகுப்பில் உங்களுக்கு வழங்க உள்ளோம். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை விளாசி அதுமட்டுமின்றி 34 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து மிகப்பெரிய சரித்திரத்தை கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.

Sachin 1

- Advertisement -

கிரிக்கெட் களத்தில் நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்பதற்கு பெயர்போன சச்சின் பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருக்க அவருடைய பண்பும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் களத்தில் ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்தாமல் நல்ல குணத்தால் அனைவரையும் கவர்ந்தவர். அம்பயர் விக்கெட் கொடுத்தால் அடுத்த நொடி மறுபேச்சின்றி தனது எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் அம்பயரின் தீர்ப்புக்கு மரியாதை கொடுத்து வெளியேறும் பண்பு உடையவர்.

அதுமட்டுமின்றி தான் அவுட் என்று தனக்கு தெரிந்தால் அம்பயர் அவுட் கொடுக்கும் வரை காத்திருக்காமல் அவராகவே நடந்து வெளியேறும் அளவிற்கு கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜென்டில்மேனாக திகழ்ந்தவர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய வந்த வீரரை அவர் வாயாலே மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம். 1997 ஆம் ஆண்டு கனடாவில் நடந்த சஹாரா கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு முறை முக்கியமான போட்டியில் சந்தித்தன.

saqlain

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கரை பார்த்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாக் ஸ்லெட்ஜிங் செய்தார். இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில் முஷ்டாக் கூறியதாவது : அன்றைய போட்டியில் நான் சிறப்பாக விளையாடி வந்த அவரை நோக்கி நான் ஸ்லெட்ஜிங் செய்தேன். ஆனால் இன்று வரை நான் அவரை என்ன சொல்லி ஸ்லெட்ஜிங் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் ஸ்லெட்ஜிங் செய்த பிறகு சச்சின் டெண்டுல்கர் என்னிடம் வந்து நான் உங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதே இல்லை. பின்னர் ஏன் நீங்கள் என்னிடம் இவ்வாறு தவறாக நடக்கிறீர்கள் ? என்று கேட்டார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி நான் உங்களை ஒரு வீரராகவும், ஒரு மனிதராகவும் மிகவும் மதிக்கிறேன். நீங்கள் என்னை இவ்வாறு ஏன் பேசினீர்கள் ? என்பது எனக்கு தெரியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் என்னிடம் கூறினார். அப்போது நான் அவரிடம் என்ன பதில் கூற வேண்டும் என்பதே எனக்குத் தெரியவில்லை. அதனால் அப்போது நான் அமைதியாக இருந்து விட்டேன். ஆனால் அந்த போட்டிக்கு பிறகு நான் சச்சின் டெண்டுல்கரிடம் நேரடியாக சென்று இந்த சம்பவம் குறித்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டேன் என முஷ்டாக் அந்தப் போட்டியில் கூறினார்.

மேலும் அதன் பிறகு அவர் என்னை பல போட்டிகளில் சந்தித்து எனது பந்துவீச்சில் பல போட்டிகளில் விளையாடி சிறப்பாக ரன் குவித்து இருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்ததே இல்லை என சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார். இந்த சுவாரஸ்யமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement