எவ்ளோ பெரிய வீரராக இருந்தால் என்ன ? ரோஹித்துக்கு எச்சரிக்கை விடுத்த சபா கரீம் – விவரம் இதோ

Karim

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் வேளையில் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் மீதும், வீரர்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது சபா கரீம் ரோகித் சர்மா இடம் குறித்து தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் அவரால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை இங்கிலாந்து மண்ணின் தன்மையை அறிந்து இந்திய வீரர்கள் விளையாட தவறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

Rohith

மேலும் இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மா எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து கூறிய அவர் : ரோகித் சர்மா தற்போது ஒரு சீனியர் வீரர். அதனால் அவர் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் செய்ய சிரமமாக இருந்தாலும் துவக்க வீரராக அவர் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

rohith 1

அவர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவரால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். கடந்த ஒன்றரை வருடமாக ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் முன்னணி வீரராக விளையாடி வருகிறார். எனவே அவரது பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென சபா கரிம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement