நாம தான் சஞ்சு சாம்சனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றோம் ஆனா அவர் அதுல நம்மல ஏமாத்திகிட்டே இருக்காரு – சபா கரீம் அதிருப்தி

Karim
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் ஜூலை மாதம் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2015இல் அறிமுகமான அவர் தன்னுடைய 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடிய பரிதாபத்தை சந்தித்து 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார்.

Sanju Samson

- Advertisement -

இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ராஜஸ்தானை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற காரணத்தால் ஓரளவு நல்ல வாய்ப்புகளை பெற்ற அவர் முதல் முறையாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அரை சதமடித்து ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று சிறப்பாக செயல்பட்டார். ஆனால் மீண்டும் வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து என கடந்த 6 மாதங்களில் இந்தியா பங்கேற்ற தொடர்களில் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக சுமாராக செயல்படும் கேஎல் ராகுல் வாய்ப்பு பெற்றது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

சுமாரான செயல்பாடுகள்:
அந்த நிலையில் தற்போது ரிசப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் காயமடைந்ததால் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள அவர் அதை தக்க வைத்துக் கொள்ள இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. முன்னதாக அனைத்து திசைகளிலும் அதிரடியாக அடிக்கும் தன்மையும் வேகம், பவுன்ஸ், சுழல் என அனைத்து வகையான பந்துகளையும் எதிர்கொள்ளும் திறமையும் பெற்றுள்ள சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்த தவறுவதாலேயே தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற முடியாமல் கழற்றி விடப்படுகிறார்.

Sanju Samson

அதனால் இவ்வளவு திறமை இருந்தும் உங்களுடைய கேரியரை பெரிய அளவில் முடிக்காமல் போனால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதும் அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதும் அவரிடம் ஒரு குறையாக இருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்களும் கருதுகிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் ரசிகர்களின் ஆதரவு அதிகப்படியாக இருந்தும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக அசத்துவதில்லை என முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் ஒவ்வொரு சீசனிலும் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நிலையில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக அசத்துவதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போது முக்கிய வீரர்கள் இல்லாததால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போது தான் அவரால் அணியில் இருக்கும் இதர வீரர்களுக்கு சவாலை கொடுக்க முடியும்”

Karim

“ஆனால் துரதிஷ்டவசமாக சஞ்சு சாம்சன் அதை செய்வதில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரை நீங்கள் பார்த்தால் அதில் அவர் அவ்வப்போது மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் நான் திலக் வர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரைப் போல் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அசத்துவதை விரும்புகிறேன். அப்படி தொடர்ச்சியாக செயல்படும் தன்மை அவரிடம் இல்லை. எப்போதுமே நல்ல நுணுக்கங்களை கொண்டுள்ள அவரிடம் நான் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளேன்”

இதையும் படிங்க:IND vs WI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?

“இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் தொடர்ந்து செயல்படுவதில்லை. அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் தனக்கான இடத்தை இன்னும் நிலையாக பிடிக்கவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல திலக் வர்மா, ஜெய்ஸ்வால் கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் முந்தைய சீசனில் எடுத்த ரன்களை விட இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் 458 ரன்கள் அடித்த அவர் இந்த சீசனில் 360 அடித்தது போல தொடர்ந்து அசத்துவதில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement