IND vs WI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?

IND-vs-WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வகையான கிரிக்கெட் தொடரும் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துவிட்டது.

IND

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த இரு தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரானது எந்த தேதியில் துவங்குகிறது? எந்த மைதானத்தில் நடைபெறுகிறது? என்ற தெளிவான தகவலை இங்கு காணலாம்.

அதோடு இந்த போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தெளிவான தகவலையும் இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை டோமினிக்கா நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30pm மணிக்கு துவங்கும்.

DD Sports

அதே போன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 20 முதல் 24 ஆம் தேதி வரை டிரினிடாட் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியும் இரவு 7.30pm மணிக்கு துவங்கும். அதோடு இந்த போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நூறாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிடி ஸ்போர்ட்ஸ் சேனலின் மூலம் நேரலையாக கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைனில் போட்டிகளை காண விரும்புவோர் ஜியோ சினிமா மற்றும் ஃபேன்கோடு ஆகியவற்றின் மூலம் இந்த தொடரை கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : விராட், ரோஹித் உசத்தியா? புஜாராவ மட்டும் ஏன் இப்டி மோசமா நடத்துறீங்க – முன்னாள் இந்திய வீரர் கோபம்

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரகானே, கேஎஸ் பரத், இசான் கிசான், ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துள் தாகூர், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி

Advertisement