- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு எல்லாம் ஓகே தான்.. ஆனா ரோஹித் சர்மா கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – சபா கரீம் எச்சரிக்கை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதனை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்து தாங்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாகவும் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக 2027 உலக கோப்பை தொடர் வரை தாங்கள் விளையாட விருப்பம் தெரிவித்தனர்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய : சபா கரீம்

இந்திய அணி அடுத்த ஆண்டு இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் அதுவரை இந்திய அணியில் தொடர்ச்சியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நீடிக்க முடியுமா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. ஏனெனில் ஒரே ஒரு ஃபார்மேட்டில் மட்டும் இரண்டு வீரர்களும் விளையாடி வருவதால் அவர்களை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யுமா? என்ற சந்தேகம் உள்ளது.

- Advertisement -

அதேபோன்று எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்குமா? என்ற கேள்வியும் தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வேளையில் அடுத்த ஆண்டு 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே விராட் கோலி டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதோடு அவரது பிட்னஸ் மிகச் சிறப்பாக இருக்கிறது. எனவே விராட் கோலிக்கு அடுத்த ஆண்டு விளையாடுவதில் எந்த ஒரு சிக்கலுமே இருக்காது. ஆனால் ரோகித் சர்மாவின் விடயத்தில் தான் சற்று பிரச்சனை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருவேளை ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து ரோஹித் விலகினால் – அவரது இடத்தை பிடிக்க காத்திருக்கும் 3 வீரர்கள்

ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் காயம் காரணமாக பல போட்டிகளை தவறவிட்டார். அதோடு அவரது ரன் குவிக்கும் திறனும் சற்று பின்தங்கியுள்ளது. எனவே இனிவரும் மாதங்களில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை தேர்வாளர்கள் உற்று கவனிப்பார்கள். அதனால் ரோஹித் சர்மா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ரன் குவிப்பதோடு மட்டுமின்றி உடற்தகுதியையும் சரியாக பாதுகாத்தால் மட்டுமே அவருக்கு அடுத்த ஆண்டு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -