பிட்டே இல்லாத இவரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மாற்றக்கூடாது – சபா கரீம் ஓபன்டாக்

Karim
- Advertisement -

இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி திடீரென விலகியுள்ளதால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்த விராட் கோலி வெளிநாடுகளில் பல வெற்றிகளை குவித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக விடை பெற்றுள்ளார்.

kohli

- Advertisement -

இந்த வேளையில் 40 டெஸ்ட் வெற்றிகளுடன் ஆசிய அளவில் மிகச்சிறந்த கேப்டனாக சாதனை படைத்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு நிகரான ஒரு கேப்டன் திடீரென இந்தியாவுக்கு கிடைப்பது சற்று கடினமாகும்.

அனுபவமா – இளமையா :
தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் அனுபவமாக இருக்கும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவருக்கு 34 வயது ஆகிவிட்டதால் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்.

rahul 2

இதில் ஏற்கனவே கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப் மோசமாக இருந்ததால் ரிஷப் பண்ட்டை டெஸ்ட் கேப்டனாக அறிவிக்க வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இப்போதைக்கு ரோஹித்:
இப்படி பல கருத்துக்கள் நிலவி வந்தாலும் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக விரைவில் ரோகித் சர்மா நியமிக்கப்படவுள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விராட் கோலி போல முழு உடல் தகுதியுடன் இல்லாத ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க கூடாது என முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில்,

rohith

“3 வகையான கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டால் கூட அது மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே செயல்படுத்த முடியும். விரைவில் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை முடியவுள்ளது. எனவே தற்போதைய நிலைமையை சமாளிக்க முடிவு எடுக்க வேண்டும். அந்த வகையில் ரோகித் சர்மா தான் சரியான நபராக உள்ளார். அத்துடன் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் போன்ற 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய ஒரு இளம் வீரரை கண்டறிந்து கேப்டனாக வளர்க்க வேண்டும்”

- Advertisement -

என தெரிவித்துள்ள அவர் விராட் கோலி அளவுக்கு தற்போதைய இந்திய அணியில் யாரும் கேப்டன்ஷிப் செய்யும் தகுதியுடன் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி ரோஹித்தை கேப்டனாக நியமிக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

rohith 6

பிட்னெஸ் மோசம்:
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்சிப் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு கேப்டன் பொறுப்பு பலரும் யோசிக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் விராட் கோலி போல முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவ்வப்போது காயமடைந்து விடுகிறார். இதுபற்றி சபா கரிம் கூறுகையில்,

- Advertisement -

“தமது சிறப்பான செயல்பாட்டால் இந்த பொறுப்பில் செயல்படும் அளவுக்கு ரோகித் சர்மா மரியாதையை பெற்றுள்ளார். சமீபத்திய இங்கிலாந்து தொடர் அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனாலும் அந்த சவாலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டார். தம்மால் முழு உடல் தகுதியுடன் இருக்க முடியுமா என்பதே இவை அனைத்தையும் விட ரோஹித் சர்மாவுக்கு இருக்கும் ஒரே சவால். ஏனெனில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனியாளாக இந்திய அணியை முன்னின்று வழி நடத்துவது என்பது மிகப்பெரிய வேலையாகும்.

rohith 1

இதற்கு முன் அவர் சிலமுறை காயமடைந்துள்ளார், தற்போதும் கூட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். எனவே கேப்டன் பற்றிய முடிவு எடுப்பதற்கு முன் அவரின் உடல் தகுதியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியின் உடல் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு டெஸ்ட் தொடர் துவங்கும் போது காயம் அடையக்கூடிய கேப்டன் நம்மிடம் இருக்க முடியாது”

இதையும் படிங்க : கங்குலி, தோனி வழியில் இந்திய கிரிக்கெட்டின் மரபை உயர்த்தியவர் இவர்தான் – இயான் சேப்பல் பாராட்டு

என கூறியுள்ள அவர் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட தகுதியானவர் என்றாலும் அவரின் பிட்னஸ் மோசமாக இருப்பதால் அவரை கேப்டனாக நியமிக்கலாமா என ஒன்றுக்கு இரண்டு முறை பிசிசிஐ கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இவரைப்போலவே ரோகித் சர்மா அடிக்கடி காயம் அடைந்து விடுவதால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் கேப்டனாக சரிப்பட்டு வரமாட்டார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement