தவான் தகுதியற்றவரா – ஒவ்வொரு தொடருக்கும் புதிய கேப்டனை மாற்றும் பிசிசிஐயை மீது முன்னாள் வீரர் கோபம்

Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஜிம்பாப்வேயில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட 2வது தர இளம் இந்திய அணி இன்று தனி விமானம் வாயிலாக ஜிம்பாப்வேக்கு புறப்பட்டது. முன்னதாக ஐபிஎல் 2022 தொடருக்குபின் காயமடைந்த கேஎல் ராகுல் குணமடைய தாமதமானதால் இளம் வீரர்களை வைத்து வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் செய்து சாதனை படைத்த ஷிகர் தவான் மீண்டும் இந்த தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

INDvsZIM

- Advertisement -

அந்த நிலைமையில் வரும் ஆகஸ்ட் 27ல் துவங்கும் ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணிக்கு கேஎல் ராகுல் குணமடைந்து திரும்பியதால் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் ராகுல் குணமடைந்து விட்டார் என்பதற்காக திடீரென்று நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஷிகர் தவானுக்கு பதில் ஜிம்பாப்வே தொடரின் கேப்டனாக அவரை பிசிசிஐ அறிவித்தது நிறைய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் கோபம்:
ஏனெனில் 2013 முதல் நிரந்தர தொடக்க வீரராக ஐசிசி போன்ற தொடர்களில் நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஷிகர் தவான் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நல்ல கேப்டன்ஷிப் செய்து வைட்வாஷ் வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தார். அத்துடன் 2019க்குப்பின் சந்தித்த காயத்தால் வெளியேறிய அவரை 35 வயதை கடந்து விட்டார் என்பதற்காக டி20 அணியிலிருந்து கழற்றி விட்டுள்ள அணி நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித், ராகுல் ஆகியோர் ஓய்வெடுக்கும் போது அல்லது காயமடையும் போது மட்டும் கேப்டனாக வாய்ப்பளித்து அடுத்த தொடரிலேயே கழற்றி விடுகிறது.

KL-Rahul

அந்த நிலைமையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் ஜிம்பாப்வே தொடருக்கு தவான் கேப்டன்ஷிப் செய்ய தகுதியற்றவரா அல்லது அவரைவிட ராகுல் கேப்டன்ஷிப் அம்சத்தில் உயர்ந்தவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் தவான் தலைமையில் ராகுல் துணை கேப்டனாக விளையாட மாட்டாரா என்றும் ரசிகர்கள் அணி நிர்வாகத்தை விளாசுகின்றனர். அத்துடன் நிறைய வெற்றிகளையும் அனுபவத்தைப் பெற்றுள்ள தவானுக்கு நன்றி காட்டாமல் அவர் அவமானப்படுத்தப் படுவதாகவும் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

தகுதியற்றவரா தவான்:
இதுபோக இந்த வருடம் கிட்டத்தட்ட இந்தியா விளையாடும் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு புதிய வீரர் கேப்டனாக செயல்படுவதும் வழக்கமாகி வருவது அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் ராகுல் சாதாரண வீரராக விளையாடினால் எதுவும் மோசமாகிவிடுமா என்று அணி நிர்வாகத்தையும் பிசிசிஐயையும் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விளாசியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Karim

“கேஎல் ராகுல் இந்த தொடரில் சாதாரண வீரராக விளையாடியிருக்க வேண்டும். அவரை கேப்டன் அல்லது துணை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்புகிறார். மறுபுறம் சீனியரான ஷிகர் தவான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார். எனவே நீங்கள் அவருக்கு தான் கேப்டனாக அறிவிப்பதில் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்”

“இங்கு நான் ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக வழிநடத்தினார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அந்த தொடரில் அவரது தலைமையில் இளம் வீரர்களை வைத்து இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. அவரது தலைமையில் நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த வகையில் அந்த தொடரை சிறப்பாக கட்டுக்குள் வைத்திருந்த தவான் பீல்டிங் செட் செய்வது, சரியான யுக்திகளை கடை பிடிப்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் பெரும்பாலும் அசத்தினார். அவர் இளம் வீரர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் கேப்டனாக செயல்பட்டார்” என்கூறினார்.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

புதுபுது கேப்டன்கள்:
இதுபோக 7 மாதத்திற்கு 7 கேப்டன் ஒவ்வொரு தொடருக்கும் புதிய கேப்டன் என்று கருவேப்பிலையை போல் கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் மாற்றுவது கேள்விக்குரியது என்றும் சபா கரீம் கண்டனம் தெரிவித்துப் பேசியது. “இதுபோன்ற வேடிக்கையான கேப்டன்ஷிப் மாற்றங்கள் கேள்விக்குரியது. இதுபோன்ற முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். நீங்கள் வலுவான அணியை உருவாக்க வேண்டுமே தவிர இப்படி அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர் அந்த தொடரில் என்ன செய்யலாம் என்று திட்டத்தை வகுக்கும்போது திடீரென அவரை மாற்றினால் எதுவும் சரியாக அமையாது. அது அந்த கிரிக்கெட் வீரரின் மன உறுதியை பாதிக்கிறது” என்று கூறினார்.

Advertisement