அதுக்குள்ள அவர் செய்த நன்றியை மறந்துட்டிங்கள்ள, பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை விளாசிய கரீம் – காரணம் இதோ

Karim
- Advertisement -

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் அடுத்ததாக 2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அணிகளில் டி20 தொடருக்கு ஹரிதிக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக செயல்பட உள்ளனர். அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. இருப்பினும் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி முறையாக கேப்டனாக ரோகித் சர்மா தலைமையில் சீனியர் நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணி விளையாடுவதற்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது.

- Advertisement -

ஆனால் அதற்காக விராட் கோலியையும் இலங்கை டி20 தொடரில் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு புறக்கணித்துள்ளது அவரது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பேட்டிங் துறையில் ரோகித் சர்மா, ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தடவலாக செயல்பட்ட நிலையில் அவரும் சூரியகுமாரும் தான் பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்கள். குறிப்பாக 295 ரன்கள் விளாசி அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேனாக சாதனை படைத்த விராட் கோலி ஒட்டு மொத்த டி20 உலக கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மனாக உலக சாதனை படைத்தார்.

அதுக்குள்ள மறந்துட்டீங்களா:
அதை விட பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 160 ரன்களை துரத்தும் போது சூரியகுமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 31/4 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவர் 82* ரன்கள் குவித்து காலத்திற்கும் மறக்க முடியாத அபார வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய விராட் கோலி தற்சமத்தில் நல்ல பார்முக்கு திரும்பியும் இலங்கை டி20 தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒதுக்கப்பட்டுள்ளது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டி20 உலக கோப்பையில் அவர் இல்லாமல் இருந்திருந்தால் நாம் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றிருப்போம். அவர் டி20 கிரிக்கெட்டில் அணிக்கு வளைவு தன்மையை கொடுக்கும் ஒரு மிகச் சிறந்த வீரர் ஆவார்”

“அதே சமயம் விராட் கோலி தவிர்த்து இதர நட்சத்திர வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளது ஆச்சரியமில்லை ஏனெனில் அவர்கள் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டுள்ளனர். மேலும் இந்த இலங்கை டி20 தொடரில் இடம் பெறாத வீரர்கள் இடம் பிடித்துள்ள புதிய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியாது என்று அர்த்தமல்ல. எனவே இந்த டி20 தொடரில் ஏதேனும் புதிய வீரர்கள் சுமாராக செயல்படும் பட்சத்தில் ஏற்கனவே இருந்த வீரர்கள் மீண்டும் வருவார்கள். அது நடந்தால் விராட் கோலி, ரிசப் பண்ட் மீண்டும் அணிக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: சாம்பியனான நீங்க சீக்கிரம் வரணும் – சேவாக் முதல் அஃப்ரிடி வரை ரிஷப் பண்ட்டுக்கு ட்விட்டரில் குவிந்த பிராத்தனைகள் இதோ

முன்னதாக இப்போதும் விராட் கோலி மிகவும் முக்கியமான பேட்ஸ்மேன் என்ற நிலைமையில் 2023இல் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே டி20 உலககோப்பை போன்ற முக்கிய தொடர் வரும் போது விராட் கோலி நிச்சயமாக அதில் இடம் பிடித்து இந்திய டி20 அணியில் விளையாடுவார் என்று நம்பலாம்.

Advertisement