சாம்பியனான நீங்க சீக்கிரம் வரணும் – சேவாக் முதல் அஃப்ரிடி வரை ரிஷப் பண்ட்டுக்கு ட்விட்டரில் குவிந்த பிராத்தனைகள் இதோ

Sehwag-and-Rishabh-Pant
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் விபத்தில் சிக்கியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடைசியாக கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மட்டும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. வங்கதேச தொடரில் லேசான காயத்துடன் விளையாடிய அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைய ஜனவரி 3 – 15 வரை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல வேண்டும் என்பதாலேயே இலங்கைத் தொடரில் சேர்க்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது.

அந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டிற்கு திரும்புவதற்காக இன்று காலை டேராடூனிலிருந்து டெல்லிக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் பயணித்த போது ரூர்க்கி எனும் ஊரின் ஒரு இடத்தில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் கார் மோதியது. அதனால் தலை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையான காயங்களை சந்தித்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி காரிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

சாம்பியன் பண்ட்:
அப்போது அடுத்த சில நிமிடங்களில் திடீரென்று தீப்பற்றி எறிந்த கார் மோசமாக சேதமடைந்தது. அதை அறிந்த பொதுமக்களும் காவல்துறையும் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். நூலிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் சமீபத்திய நிலவரப்படி எலும்பு முறிவு போன்ற காயங்களை சந்திக்கவில்லை என்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து தப்பிவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனால் ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியடைந்து சோகத்திற்குள்ளான ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளார்கள். மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையும் மிஞ்சி வரலாற்றுச் சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ள அவர் விரைவில் குணமடைந்து இந்தியாவுக்காக விளையாட வரவேண்டும் என்று ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அந்த அன்பு கலந்த பிரார்த்தனை தொகுப்புக்கள் பின்வருமாறு.

- Advertisement -

இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்டுக்காக பிரார்த்தனை செய்கிறேன். நல்ல வேலையாக அவர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். விரைந்து குணமடைந்து வாருங்கள் சாம்பியன்” என்று பதிவிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஜாம்பவான் விரேந்தர் சேவாக் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“அன்பான ரிஷப் பண்ட் சூப்பராக ஸ்பீடாக குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். மிகவும் சீக்கிரம் குணமடைந்து வா” என்று கூறியுள்ளார். மற்றொரு நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது பின்வருமாறு. “நீ சீக்கிரம் குணமடைந்து வர வேண்டுகிறேன் தம்பி ரிசப் பண்ட். என்னுடைய பிரார்த்தனைகள் உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் உள்ளது. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதே போல் டெல்லியை சேர்ந்த மற்றொரு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் “மிகவும் சீக்கிரமாகவும் முழுமையாகவும் குணமடைந்து வா ரிசப். உடலை கவனித்துக் கொள்” என்று வாழ்த்தியுள்ளார். அவர்களுடன் அஷ்வின், முகமது அசாருதீன், முனாப் பட்டேல், ராபின் உத்தப்பா, அபிநவ் முகுந்த், ஜூலன் கோஸ்வாமி, சுப்ரமணியம் பத்ரிநாத், முகமது கைஃப், உமேஷ் யாதவ், சிகர் தவான், வெங்கடேஷ் பிரசாத், குல்தீப் யாதவ் உட்பட ஏராளமான முன்னாள் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் தங்களது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணி நிர்வாகங்களும் அனைத்து ரசிகர்களும் அவருக்கு பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இப்படி அன்பால் பிரார்த்தனைகளை பெற்று வரும் ரிசப் பண்ட்டுக்கு நாடு மற்றும் எல்லைகளை கடந்து டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியா ஜாம்பவான ரிக்கி பாண்டிங் விரைவில் நீங்கள் குணமடைந்து கால் பதிக்க வேண்டும் என்று பிரார்த்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்கஎனக்கு விபத்து நடக்க இதுதான் காரணம். போலீசரிடம் ரிஷப் பண்டே அளித்த வாக்குமூலம் – போலீஸ் டி.ஜி.பி பேட்டி

அவருடன் நிக்கோலஸ் பூரான், ரசித் கான் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பிரார்த்தனை வெளிப்படுத்தியுள்ளனர். அதை விட பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும் விரைவில் குணமடைய தனது பிரார்த்தனையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் முகமது ஹபிஸ், ஹசன் அலி போன்ற பாகிஸ்தான் நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்த பிரார்த்தனை செய்வது வருவதால் விரைவில் ரிசப் பண்ட் குணமடைந்து வருவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement