அவர் மேல நம்பிக்கை போய்டுச்சு.. அதான் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துட்டாங்க.. சபா கரீம்

Saba Karim
- Advertisement -

தென்னாபிரிக்க தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

காரணம் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்தனர். அந்த சமயங்களில் அவர்களைப் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

நம்பிக்கை போய்டுச்சு:
இருப்பினும் சமீபத்திய தொடர்களில் கேப்டன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளனர். அந்த நிலைமையில் மீண்டும் அணிக்கு வந்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று தேர்வுக் குழுவினர் நினைத்ததாக முன்னாள் உறுப்பினர் மற்றும் இந்திய வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

ஆனால் காயத்தை சந்தித்து வெளியேறுவதை வழக்கமாக வைத்திருக்கும் பாண்டியா மீது நம்பிக்கை இழந்த தேர்வுக் குழுவினர் மீண்டும் ரோகித்தை கேப்டனாக நியமித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்த 2 வீரர்களும் ஆப்கானிஸ்தான் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றால் தேர்வுக் குழுவினர் தங்களுடைய சிந்தனையில் பெரிய மாற்றத்தை செய்துள்ளார்கள் என்பது அர்த்தமாகும்”

- Advertisement -

“அதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் உலகக் கோப்பையில் அனுபவம் தேவை என்று அவர்கள் கருதுகின்றனர். அதன் காரணத்தாலேயே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது கம்பேக் கொடுத்துள்ளார்கள். இங்கே மற்றொரு விஷயமும் இருக்கிறது. அதாவது ஹர்திக் பாண்டியா மீது கேப்டனாக இதுவரை தேர்வு குழுவினர் நம்பிக்கை வைத்திருந்தனர்”

இதையும் படிங்க: அந்த பாகிஸ்தான் லெஜெண்ட் என்னோட பவுலிங்கை அடிச்சு ஜெயிச்சுருப்பாரு.. வைரலாகும் அஸ்வினின் பதிவு

“ஆனால் ஹர்திக் பாண்டியாவின் காயம் மீது தற்போது பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதனாலேயே அவர்கள் மீண்டும் ரோகித் சர்மா நோக்கி சென்றுள்ளார்கள். ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் நிலைத்தன்மையை கொண்டு வருவதை தேர்வுக் குழுவினர் விரும்புகின்றனர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடி தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement