அந்த பாகிஸ்தான் லெஜெண்ட் என்னோட பவுலிங்கை அடிச்சு ஜெயிச்சுருப்பாரு.. வைரலாகும் அஸ்வினின் பதிவு

Javed Miandad
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் இதுவரை 95 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதில் மொத்தம் 718* விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார்.

அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற மாபெரும் சாதனையை சமீபத்தில் படைத்திருந்த அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் தற்சமயத்தில் விளையாடும் மகத்தான வீரர்களில் சிலர் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பிரபல இஎஸ்பிஎன்ஃபோ இணையம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பியிருந்தது.

- Advertisement -

அஸ்வின் பதில்:
அந்த பட்டியலில் விராட் கோலி – வக்கார் யூனிஸ், பாபர் அசாம் – அனில் கும்ப்ள, சயீத் அன்வர் – ஜஸ்ப்ரித் பும்ரா, ரோகித் சர்மா – வாசிம் அக்ரம், சச்சின் டெண்டுல்கர் – சாகின் அப்ரிடி, ஜாவேத் மியான்தத் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மோதினால் யார் வெல்வார் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்போதைய சாகின் அப்ரிடியை எந்த காலத்திலும் சச்சின் அடித்து நொறுக்குவார் என்று பதிலளித்தனர்.

அதே போல பாபர் அசாமுக்கு சந்தேகமின்றி அனில் கும்ப்ளே சவாலை கொடுத்து அவுட்டாக்குவார் என்பது போல் நிறைய ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பட்டியலில் தமக்கு எதிராக உள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத் ஒருவேளை தற்போது தம்மை எதிர்கொண்டால் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டிருப்பார் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மியான்தத் எனக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருப்பார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். அவர் விளையாடிய காலத்தில் நானும் விளையாடுவதற்கு ஒரு டைம் மெஷின் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஆர்சிபி’க்கு விளையாட விருப்பமே இல்ல.. அவர் தான் மிரட்டி ஆடவச்சாரு.. பிரவீன் குமார் பேட்டி

முன்னதாக 90களில் பாகிஸ்தானுக்காக விளையாடிய மியான்தத் 124 டெஸ்ட் மற்றும் 233 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 16123 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக மட்டும் 63 போட்டிகளில் 3403 ரன்களை குவித்துள்ள அவர் ஆசிய – அஸ்ட்ரால் கோப்பை ஃபைனலில் சிக்ஸர் அடித்து தோற்கடித்ததை மறக்க முடியாது.

Advertisement