நேற்று பெங்களூரில் நடந்த சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையேயான போட்டியின் போது டோனியின் பிட்னெஸை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர். மேலும் இந்த வயதிலும் இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக உள்ள தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Lightning quick MSD on-field #RCBvCSK https://t.co/1ilguWg0ZH via @ipl
— Deepak Raj Verma (@iconicdeepak) April 25, 2018
தற்போது 36 வயதாகும் தோனி இந்த வயதிலும் தற்போது உள்ள இளம் வீரர்களுக்கு இணையான பிட்னெசில் உள்ளார். மேலும் தோனி பேட்டிங் செய்யும் போது அவர் ஓடி ரன் எடுக்கும் வேகம் நாம் அனைவரும் அறிவோம். மேலும் தோனி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை விட சிறந்த விக்கெட் கீப்பர் என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வனர்.
இந்நிலையில் அதனை மீண்டும் நிரூபிக்கும் விதத்தில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் டீ காக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அடிக்கப்பட்ட பந்து கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனிக்கு பின்னல் பவுண்டரி லைன் வரை சென்று விட்டது. அதனை மின்னல் வேகத்தில் தோனி துரத்தி சென்று பிடித்துள்ளார். அந்த அற்புதமான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.