- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார்.. ஆனால் அவர் அறிமுகம் ஆகாதது ஏன்? – துணை பயிற்சியாளர் விளக்கம்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரினை அயர்லாந்து அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதே வேளையில் புதிய கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி முதல் தொடரிலேயே தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆகாதது ஏன்? : துணை பயிற்சியாளர் விளக்கம்

இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆகாததும் பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அவர் 30 பந்துகள் இருந்தால் கூட போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அதனால் அவரை துவக்க வீரராக விளையாட வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆகாது ஏன்? என்பது குறித்து துணை பயிற்சியாளர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முற்றிலும் தயாராகவே இருக்கிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வைபவ் ஆடுவதை காண நாங்களுமே ஆவலாக தான் காத்திருக்கிறோம். ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. எனவே அவர்களின் இடத்தை உறுதி செய்து நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது இந்திய பவுலராக முதல் ஓவரில் மோசமான சாதனையை நிகழ்த்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

தற்போதைக்கு இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நேரம் வரும்போது அவர் அறிமுகமாவார் என துணை பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -