
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஜூன் 20-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
அதனை தொடர்ந்து இந்த கடைசி போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை முற்றிலுமாக வீழ்த்த இந்திய அணி காத்திருக்கிறது. அதே வேளையில் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பேட்டிங் ஆர்டரிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வரும் வேளையில் நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் கே.எல் ராகுல் பின் வரிசையில் தான் விளையாடுவார் என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களம் இறங்கியதால் கில் மூன்றாவது இடத்தில் விளையாடினார். அதனால் கே.எல் ராகுல் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய நேர்ந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் கே.எல் ராகுல் பின் வரிசையில் தான் களமிறங்குவார்.
இதையும் படிங்க : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைந்த கம்பீரின் செல்லப்பிள்ளை – விவரம் இதோ
அவரை முன்கூட்டியே களமிறக்குவது குறித்து நாங்கள் எதுவும் பரிசீலிக்கவில்லை. ஜெய்ஸ்வாலை இன்னும் நாங்கள் உன்னிப்பாக கவனிக்க விரும்புகிறோம். அவர் கடந்த போட்டியில் ரன் எடுக்கவில்லை என்பதனால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.