பவர்பிளே ஓவர்களில் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ரயான் ரிக்கல்டன் – விவரம் இதோ

Ryan Rickelton
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 2-ஆம் தேதியான இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ரயான் ரிக்கல்டன் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சி.எஸ்.கே அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நமன் தீர் 57 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 37 ரன்களையும் குவித்தனர். அதிலும் குறிப்பாக ரயான் ரிக்கல்டன் 24 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார்.

இதன்மூலம் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐபிஎல் போட்டிகளில் சமன் செய்துள்ளார். அதாவது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பவர்பிளே ஓவர்களுக்குள்ளாக 5 சிக்ஸர்களை அடித்து சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் இன்றைய போட்டியில் ரிக்கல்டனும் பவர்பிளே ஓவர்களுக்குள் ஐந்து சிக்ஸர்களை அடித்து அவரது இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னைக்கு தான் வருவார் தோனி? இன்றைய போட்டியிலும் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக பவர்பிளே ஓவர்களில் சனத் ஜெயசூரியா 7 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement