என்னைக்கு தான் வருவார் தோனி? இன்றைய போட்டியிலும் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய எம்.எஸ் தோனி :

அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியின் சார்பாக மகேந்திர சிங் தோனி இடம் பெறுவாரா? என்பதே ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் இன்றைய போட்டிக்கான டாசுக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் :

அணியில் இரண்டு மாற்றங்கள் இருப்பதாகவும் அந்த வகையில் குர்ஜப்நீத் சிங்குக்கு பதிலாக ராமகிருஷ்ணா கோஷுக்கும், அகில் ஹுசேனுக்கு பதிலாக பிரசாந்த் வீருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தவிர்த்து அணியில் வேறெந்த மாற்றமும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு நல்ல சாதகம் இருக்கு.. அதேவேளையில் மும்பை அணி ஜெயிக்க இதை செய்யனும் – அஷ்வின் கருத்து

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கணுக்கால் காயம் ஏற்படதன் காரணமாக முதல் 8 போட்டிகளை தவறவிட்ட தோனி தற்போது தொடர்ச்சியாக ஒன்பதாவது போட்டியையும் தவற விட்டுள்ளார். இதன் காரணமாக இந்த தொடரில் அவர் பங்கேற்பாரா? என்று சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement