வேற வழியில்ல.. சஞ்சு சாம்சன் அதை செய்வார்ன்னு இந்திய அணி நம்புது.. கோச் ரியான் ஆதரவு பேட்டி

Ryan Doeschate
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய சுற்றில் 3க்கு 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது. அடுத்ததாக இந்தியா செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச அணியை துபாயில் எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் துணை கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதால் ஓப்பனிங்கில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் காரணமாக பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளில் களமிறங்காத சாம்சன் ஓமனுக்கு எதிராக மெதுவாக விளையாடி அரை சத்தத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

வேற வழியில்லை:

இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 13 (17) ரன்கள் மட்டுமே அடித்த அவர் சுமாராக பேட்டிங் செய்தார். கடந்த காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடி 3 சதங்கள் அடித்து அசத்தினார். ஆனால் தற்போது மீண்டும் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடும் சாம்சன் இன்னும் ஓரிரு போட்டிகளில் சொதப்பினால் அணியிலிருந்து கழற்றி விடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் அபிஷேக், கில், திலக் வர்மா என இந்திய அணியின் டாப் ஆர்டர் செட்டாகியுள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் கூறியுள்ளார். எனவே சாம்சன் தொடர்ந்து மிடில் ஆர்டரில் மட்டுமே விளையாடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரிலும் சாம்சன் அசத்துவார் என்று இந்திய அணி நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய அணி ஆதரவு:

“ஆம், அவருக்கு 2 ஒழுக்கமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அவர் மிடில் ஆர்டரில் எப்படி விளையாட வேண்டும் என்று இன்னும் கண்டறிந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் ஆடுகளமும் கொஞ்சம் சோர்வாக இருந்தது. ஆனால் டாப் ஆர்டரில் அபிஷேக் – கில் விளையாடும் விதத்துடன் 3, 4வது இடங்களில் திலக் மற்றும் கேப்டன் சூரியகுமார் விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? – விவரம் இதோ

“எனவே நாங்கள் 5வது இடத்தில் விளையாடுவதற்கான வீரர்களை பார்க்கிறோம். அந்த வேலையை செய்வதற்கு சஞ்சு சிறந்த மனிதர் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த வேலையில் வருங்காலங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் கண்டறிவார் என்பதில் எங்களுக்கு எனக்கு சந்தேகமும் இல்லை” என்று கூறினார். இதிலிருந்து ஆசியக் கோப்பை முழுவதும் சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Advertisement